சுவிஸ் வங்கிகளில் இனி 'நேரத்தை' டெபாசிட் செய்யலாம்! அரசின் புதிய திட்டம்
சுவிட்சர்லாந்தில், பணத்தை டெபாசிட் செய்வது போல இனி வங்கிகளில் உங்கள் நேரத்தையும் டெபாசிட் செய்ய முடியும்.
'காலம் பொன் போன்றது', 'நேரத்தை வீணாக செலவு செய்யாதே' என நேரத்தை பணம் போல் மதிப்புடையதாக உலகம் முழுவதும் கருதுகின்றனர்.
மக்கள் தங்கள் கூடுதல் நேரத்தை தங்கள் பொழுதுபோக்குகளைத் தொடர அல்லது பல நூற்றாண்டுகளாக சமூக சேவைகளில் தன்னார்வத் தொண்டு செய்ய பயன்படுத்துகின்றனர்.
இந்த நிலையில், இப்போது முன்னேறி வரும் தொழில்நுட்பம், சமகால உலகில் நேர வங்கியை (Time Bank) யதார்த்தமாக்கியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் மக்கள் இனி தங்கள் நேரத்தை, விரும்பிய பொருட்களை வாங்கக்கூடிய மற்றும் சேவைகளுக்கு பரிமாற்றம் செய்யக்கூடிய பணமாக மாற்றிக்கொள்ள முடியும். அதாவது, சுவிஸ் குடிமக்கள் இப்போது தங்கள் நேரத்தை ஒரு பணத்தை போல, மிச்சப்படுத்தலாம் மற்றும் அதை தங்கள் வங்கிகளில் டெபாசிட் செய்யலாம்.
அதற்கேற்ற வகையில், சுவிஸ் சுகாதார அமைச்சகம் நாட்டில் உள்ள முதியோர்களுக்கு உதவ ஒரு நேர-வங்கி கருத்தை (time-bank concept) உருவாக்கியுள்ளது.
டைம்-பேங்க் சிஸ்டம் எப்படி வேலை செய்கிறது?
சுவிஸ் அரசாங்கத்தின் நேர வங்கி திட்டத்தின் கீழ், மக்கள் தங்கள் நேரத்தை மிச்சப்படுத்தி, அந்த நேரத்தில் தான்னார்வலர்களாக மூத்த குடிமக்கள் அல்லது உதவி தேவைப்படும் யாரேனும் ஒருவருக்கு உதவி செய்யலாம்.
அவர்கள் மீது அந்த தன்னார்வலர் கவனிப்பை வழங்க எவ்வளவு நேரம் செலவு செய்கிறார்கள் என்பது அவரது சமூக பாதுகாப்பு கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது.
அந்த தன்னார்வலர், பராமரிப்பு தேவைப்படும் வயதை அடையும் போது, அவரது நேர வங்கி உதவிக்கு வந்து மற்றோரு தன்னார்வலரால் கவனிக்கப்படுவார்கள்.
2018-ஆம் ஆண்டில், இந்தியாவில் இந்த நேர வங்கி திட்டத்தை ஏற்றுக்கொள்ளப்பட்டது.மேலும், 2019-ஆம் ஆண்டில், நேர வங்கி திட்டத்தை ஏற்றுக்கொண்ட இந்தியாவின் முதல் மாநிலமாக மத்தியப் பிரதேசம் அறிவிக்கப்பட்டது.
எத்தனை நாடுகள் நேர-வங்கி திட்டத்தை ஏற்றுக்கொண்டன?
நேர வங்கி (Time Bank) என்பது ஒரு பண்டமாற்று அமைப்பாகும், இது மக்கள் தங்கள் தேவைகள் மற்றும் திறன்களுக்கு ஏற்ப நேரத்தை டெபாசிட் செய்யவும் மற்றும் திரும்பப் பெறவும் அனுமதிக்கும்.
தன்னார்வ சேவைகள் அனைத்தும் இதில் அடங்கும், உதாரணமாக, தகவல் தொழில்நுட்ப சேவைகள், ஆலோசனைகள், குழந்தை காப்பகம், முடி திருத்துதல், தோட்டம் அமைத்தல், கட்டுமானம், பயிற்சி அல்லது நேரம் எடுக்கும் எந்த வேலையும் இதில் அடங்கும்.
இதன் விளைவாக, நேர அடிப்படையிலான அலகுகள் நேர வங்கியில் சேகரிக்கப்படும் போது, அவர்கள் மற்றவர்களிடமிருந்து நேர அடிப்படையிலான சேவைகளை வாங்க முடியும்.
சுவிட்சர்லாந்தைத் தவிர, பிரித்தானியாவும் நேர வங்கித் திட்டத்தை ஏற்றுக்கொண்டது. சிங்கப்பூரும் இந்த திட்டத்தை கொண்டுவர ஆலோசனை செய்து வருகிறது.