சுவிட்சர்லாந்தில் இனி இவர்களுக்கு மானியம் ரத்து: 80,000 குடும்பங்கள் பாதிக்கப்பட வாய்ப்பு..
ஜனவரி 2022 முதல், பசையம் சாப்பிட முடியாத குழந்தைகளுக்கு வழங்கப்படும் மானியத்தை சுவிட்சர்லாந்து அரசு ரத்து செய்கிறது.
சுவிட்சர்லாந்தில், செலியாக் (celiac) நோய் 'பிறப்பு குறைபாடுகள்' பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது, இதன் மூலம் பிறப்பு குறைபாடுகள் உள்ள குழந்தையுடன் எவருக்கும் இழப்பீடு பெரும் உரிமை உண்டு.
இதனால் செலியாக் (celiac) நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு மானியம் செலுத்தப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை வருடத்திற்கு CHF600 முதல் CHF1450 வரை மானியம் பெறுகிறது.
ஆனால், இந்த நிலைமையை ஒப்பீட்டளவில் எளிதாகக் குணப்படுத்த முடியும் என்பதாலும், சுவிஸ் சுகாதார காப்பீடு இந்த நிலைக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு பணம் செலுத்துகிறது என்பதாலும், இனி இதற்காக இழப்பீட்டுத் தொகையை வழங்கவேண்டிய அவசியம் இருக்காது என்று அரசாங்கம் இப்போது கூறியுள்ளது.
அதன்படி, வரும் ஜனவரி 1, 2022 முதல் உண்மையில் செலியாக் நோயால் பாதிக்கப்பட்டுள்ள 20 வயதிற்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் பணம் செலுத்துவதை அரசாங்கம் படிப்படியாக நிறுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், செலியாக் (celiac) நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் கொண்ட ஏழ்மையான குடும்பங்களுக்கு இது தேவையற்ற அழுத்தத்தை அளிக்கிறது என்று விமர்சகர்கள் கூறியுள்ள நிலையில், இந்த முடிவுக்கு அரசாங்கம் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
செலியாக் (celiac) நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பாஸ்தா, ரொட்டி போன்ற பசையம் (Gluten) கொண்ட உணவுகளை உட்கொள்ள முடியாது.
சமீபத்திய ஆண்டுகளில் பசையம் இல்லாத உணவுகள் சுவிட்சர்லாந்திலும் பிற இடங்களிலும் பிரபலமடைந்து வருகின்றன, உண்மையில் இந்த நிலையில் உள்ளவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் அரிதாக உள்ளது.
சுவிட்சர்லாந்தில் சுமார் 80,000 பேர் (சுமார் ஒரு சதவீத மக்கள்) உண்மையில் செலியாக் நிலையில் உள்ளனர். 2020-ல் சுமார் 3000 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
IG செலியாக் நோய் சங்கத்தின் தலைவர் Tina Toggenburger, மானியம் இல்லாமல் ஏழ்மையில் குடும்பங்களுக்கு பெரும் நிதி தாக்கங்கள் இருக்கும் என்று கூறுகிறார்.
"செலியாக் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு சாதாரன உணவுடன் ஒப்பிட்டால் கூட குறைந்தது மாதத்திற்கு சுமார் 200 பிராங்குகள் கூடுதலாக செலவிட வேண்டியிருக்கும்" என்று அவர் கூறினார்.
"செலியாக் நோய் ஒரு வாழ்க்கை முறை நோய் அல்ல (lifestyle disease), இது பாரிய சுகாதார தாக்கங்களைக் கொண்டுள்ளது. எதிர்கால முடிவுகளில் இது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
மருந்துகள் இலவசமாக இருந்தாலும், பசையம் இல்லாத உணவின் கூடுதல் செலவுகள் ஈடுசெய்யப்படாது" என்று டோகென்பர்கர் கூறினார்.