சுவிட்சர்லாந்துக்கு வரும் பிரித்தானியா இந்தியா முதலான நாட்டு பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி
சுவிட்சர்லாந்து, பயணம் தொடர்பிலான கொரோனா கட்டுப்பாடுகளை தொடர்ந்து நெகிழ்த்திவரும் நிலையில், இன்று முதல் (ஜூலை 4), திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் பரவல் குறித்த அச்சம் உள்ள நாடுகள் பட்டியலிலிருந்த மீதமுள்ள நாடுகளையும் அந்த பட்டியலிலிருந்து நீக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
அதன்படி, திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் பரவல் குறித்த அச்சம் உள்ள நாடுகள் பட்டியலிலிருந்த பிரித்தானியா, இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் அந்த பட்டியலிலிருந்து நீக்கப்படுவதாக சுவிஸ் பெடரல் பொது சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது.
இனி, இந்த நாடுகளிலிருந்து பயணிகள் சுவிட்சர்லாந்துக்கு வருவது எளிதாக இருக்கும் என்பது அதன் பொருள்.
பிரித்தானியா, இந்தியா முதலான நாடுகளுக்குச் சென்று சுவிட்சர்லாந்துக்கு திரும்பும் சுவிஸ் குடிமக்கள் மற்றும் வாழிட உரிமம் கொண்டவர்கள் மட்டுமின்றி, இனி பிரித்தானியா, இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு வரும் அந்தந்த நாட்டுப் பயணிகளுக்கும் இந்த விதிமுறை பொருந்தும்.
மேலதிக விவரங்களுக்கு... https://www.thelocal.ch/20210803/breaking-switzerland-to-remove-united-kingdom-india-and-nepal-from-covid-variant-list/