முதல் முறையாக உலக அளவில் முதலிடம் பிடித்த சுவிட்சர்லாந்து: என்ன விடயத்தில் தெரியுமா?
மனித வள மேம்பாடு தொடர்பான தரவரிசைப் பட்டியலில் சுவிட்சர்லாந்து உலகிலேயே முதலிடம் பிடித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் ஏஜன்சி ஒன்று மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் இந்த பெருமையை சுவிட்சர்லாந்து பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
மனித வள மேம்பாடு தொடர்பான தரவரிசைப் பட்டியலில் சுவிட்சர்லாந்து உலகிலேயே முதலிடம் பிடித்துள்ளது.
மனிதனின் சராசரி ஆயுள், கல்வித் தகுதி மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகிய விடயங்களில், 191 நாடுகளில் முதலிடத்தைப் பிடித்துள்ளது சுவிட்சர்லாந்து!
ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஆய்வமைப்பு ஒன்று வெளியிட்டுள்ள தகவலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படி உலகிலேயே வருடாந்திர மனித வள மேம்பாடு தொடர்பான தரவரிசைப் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடம் பெறுவது இதுவே முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Photo by Fabrice COFFRINI / AFP