சுவிட்சர்லாந்தின் மிகப்பிரபலமான Swiss Travel Pass பற்றி தெரியுமா?
சுவிட்சர்லாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிடுகிறீர்களா? அப்போது சுவிஸ் டிராவல் பாஸ் (Swiss Travel Pass) பற்றிய முழு தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்!
சுவிட்சர்லாந்தின் ரயில், பேருந்து, மற்றும் படகுப் போக்குவரத்தை உள்ளடக்கிய இந்த பாஸ் மூலம், ஒரே டிக்கெட்டுடன் நாட்டில் பல அற்புதமான இடங்களைக் கண்டுகளிக்கலாம்.
சுவிஸ் டிராவல் பாஸ் கொண்டு 90க்கும் மேற்பட்ட நகரங்களில் கட்டணம் செலுத்தாமல் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யலாம்.
மேலும், 500-க்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்களில் நுழைவு கட்டணம் இல்லாமல் செல்ல அனுமதி கிடைக்கும். மலையேற்றப் பயணங்களில் 50% வரை தள்ளுபடி மற்றும் பல இடங்களில் பயண சலுகைகளும் உண்டு.
சுவிஸ் டிராவல் பாஸ் எத்தனை நாட்களுக்கு கிடைக்கும்?
பயணிகளுக்கு 3, 4, 6, 8 அல்லது 15 நாள் பாஸ் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு உண்டு.
தொடர்ந்து பயணிக்க விருப்பமில்லாதவர்கள், 30 நாள் காலப்பகுதிக்குள் எந்த நாளிலும் பயணிக்க அனுமதிக்கும் Swiss Travel Pass Flex-ஐ வாங்கலாம். இது நீண்டகால சுற்றுலா செய்யத் திட்டமிடுபவர்களுக்கு ஏற்றது.
விலை விவரங்கள் (second-class seats):
- 3 நாட்கள் – CHF 244
- 4 நாட்கள் – CHF 295
- 6 நாட்கள் – CHF 379
- 8 நாட்கள் – CHF 419
- 15 நாட்கள் – CHF 459
6 வயது முதல் 16 வயதிற்குட்பட்ட குழந்தைகள் Swiss Family Card மூலம் இலவசமாக பயணிக்கலாம், ஆனால் பெற்றோர்கள் Swiss Travel Pass வைத்திருக்க வேண்டும். 25 வயதிற்குட்பட்ட இளையோருக்கு 30% தள்ளுபடி கிடைக்கிறது.
Swiss Travel Pass எங்கு வாங்கலாம்?
பாஸ் ஓன்லைன் அல்லது சுவிஸ் இரயில் நிலையங்களில் உள்ள விற்பனை இடங்களில் வாங்கலாம். ஓன்லைனில் வாங்க Swiss Federal Railways (SBB) இணையதளத்தை பயன்படுத்தலாம், அங்கு QR குறியீடுடன் உடனடியாக பயணிக்கலாம்.
Swiss Travel Pass மூலம் பார்வையிடும் சிறப்பான இடங்கள்
சுவிஸ் சுற்றுப்பயணத்தில் தங்கியிருக்கும் இடங்களில் இருந்து ரயிலில் எளிதில் போய் வர முடியும். புகழ்பெற்ற Glacier Express, Luzern-Interlaken Express, மற்றும் பல அழகிய காட்சிகளைக் காணலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Swiss Travel Pass, Switzerland Tour, Switzerland Tourism, Trip to Switzerland