சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கையில் வரலாறு படைத்துள்ள சுவிட்சர்லாந்து
கோவிட் காலகட்டம் மற்றும் அதைத் தொடர்ந்த ஆண்டுகளில், உலகம் முழுவதுமே சுற்றுலாவை நம்பியிருக்கும் நாடுகளின் வருவாய் கணிசமாக பாதிக்கப்பட்டது.
தற்போது, மீண்டும் அந்த நாடுகள் பழைய நிலைமைக்குத் திரும்பிவருகின்றன.
அவ்வகையில், 2025ஆம் ஆண்டில், சுவிட்சர்லாந்துக்கு வரலாறு காணாத அளவில் சுற்றுலாப்பயணிகள் வருகை புரிந்துள்ளது தெரியவந்துள்ளது.
வரலாறு படைத்துள்ள சுவிட்சர்லாந்து

2025ஆம் ஆண்டில், இதுவரை, 25.1 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் சுவிட்சர்லாந்துக்கு வருகை புரிந்துள்ளார்கள்.
ஒரு நாட்டின் சுற்றுலாவைப் பொருத்தவரை, அந்நாட்டுக்கு வந்த சுற்றுலாப்பயணிகள் எத்தனை இரவுகள் அந்நாட்டில் தங்கினார்கள் என்பதை வைத்து சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கையைக் கணக்கிடுவது வழக்கம்.
அவ்வகையில், 25.1 மில்லியன் இரவுகள் சுற்றுலாப்பயணிகள் சுவிட்சர்லாந்தில் தங்கியுள்ளார்கள்.
முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது, இது 2.6 சதவிகிதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |