சுற்றுலாப் பிரியர்களின் சொர்க்கம்... சுவிட்சர்லாந்து விசா, பிரிவுகள் மற்றும் வழிமுறைகள்
சுவிட்சர்லாந்து என்றாலே பனி மூடிய ஆல்ப்ஸ் மலைகள், அழகிய நகரங்கள், ஏரிகள் மற்றும் அழகான பள்ளத்தாக்குகள் பற்றிய எண்ணங்களே நினைவுக்கு வரும்.
பிரமிக்க வைக்கும் சுவிஸ்
சுவிட்சர்லாந்தில் சூரிச், பெர்ன் மற்றும் ஜெனீவா போன்ற நகரங்கள் அற்புதமான அருங்காட்சியகங்கள் மற்றும் ஆராய்வதற்கான சுவாரஸ்யமான கலைக்கூடங்கள், கட்டிடக்கலை ரீதியாக கட்டப்பட்ட வீடுகள் என பிரமிக்க வைக்கின்றன.
சுவிட்சர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இல்லை என்ற போதிலும், ஷெங்கன் விசாவுடன் நாட்டிற்குள் நுழையலாம். சுவிட்சர்லாந்திற்குச் செல்ல, ஒன்லைனில் விசா விண்ணப்பிக்க முடியாது. ஒவ்வொரு விண்ணப்பதாரரும் தங்கள் விசா விண்ணப்பத்தை நியமிக்கப்பட்ட பிரதிநிதிக்கு வழங்க சட்டத்தால் அனுமதிக்கப்படுகிறது.
ஒரு நபர் 90 நாட்களுக்கு மேல் தங்குவதற்கு சுவிஸ் பிரதிநிதியிடம் நேரடியாக கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். 90 நாட்கள் வரை ஷெங்கன் விசாவிற்கு விண்ணப்பிப்பவர்கள், தங்கள் சொந்த நாட்டில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
விசா வகைகள்:
1.சுற்றுலா விசா
சுற்றுலா விசா பெறுவதற்கு: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, சுற்று-பயண விமான டிக்கெட்டுகள், உறுதி செய்யப்பட்ட தங்குமிடம், சுகாதார காப்பீடு, குறைந்தது இரண்டு புகைப்படங்கள் மற்றும் நிதி ஆதாரமாக வங்கி அறிக்கையும் சமர்ப்பிக்க வேண்டும்.
180 நாட்களுக்கு என வழங்கப்படும் சுற்றுலா விசாவானது 90 நாட்களுக்கு மேல் செல்லுபடியாகாது.
2. வணிக விசா
சுவிட்சர்லாந்தில் வணிக விசா பெறுவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, சுற்று-பயண விமான டிக்கெட்டுகள், நிறுவனத்திடமிருந்து அழைப்புக் கடிதம் உட்பட அடிப்படை ஆவணங்கள் அனைத்தும் சமர்ப்பிக்க வேண்டும். வணிக விசாவும் 90 நாட்களுக்கு மேல் செல்லுபடியாகாது.
3. மாணவர் விசா
சுவிட்சர்லாந்தில் கல்விக்கான மாணவர் விசாவானது அதிகபட்சம் மூன்று மாதங்கள் குறுகிய காலம் தங்க அனுமதிக்கிறது. கல்வி நாட்களின் அடிப்படையில், சொந்த நாட்டிலிருந்தே நீண்ட காலம் தங்குவதற்கு விண்ணப்பிக்கலாம்.
4. போக்குவரத்து விசா
சுவிட்சர்லாந்தின் போக்குவரத்து விசாவானது 24 மணிநேரத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், உறுதி செய்யப்பட்ட மூன்றாவது நாட்டிற்கான விமான டிக்கெட், குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, உங்கள் கடவுச்சீட்டின் முதல் மற்றும் கடைசி பக்கத்தின் நகல், விசா கட்டணம் செலுத்தியதற்கான சான்று மற்றும் இறுதி நாட்டிற்கான செல்லுபடியாகும் விசா ஆகியவை சமர்ப்பிக்க வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |