ஜேர்மனிக்குள் எல்லை தாண்டி ஷாப்பிங் செல்வோருக்கு புதிய கொரோனா விதிகளால் பாதிப்பு ஏற்படுமா?

Covid Corona germany
By Balamanuvelan Nov 19, 2021 01:17 PM GMT
Balamanuvelan

Balamanuvelan

in ஜெர்மனி
Report

ஜேர்மனியிலுள்ள பல்பொருள் அங்காடிகள் எப்போதுமே விலை குறைவாக பொருட்களை விற்பனை செய்வதால், பல ஆண்டுகளாக ஜேர்மன் எல்லையிலுள்ள சுவிஸ் மாகாண மக்கள் ஷாப்பிங் செய்வதற்காக எல்லை தாண்டி ஜேர்மனிக்கு செல்வதுண்டு.

ஆனால், தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்துவருவதையடுத்து ஜேர்மனி கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கிவருகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், ஜேர்மனிக்கு ஷாப்பிங் செல்பவர்களை இந்தக் கட்டுப்பாடுகள் பாதிக்குமா?

பெட்ரோலைத் தவிர பெரும்பாலான பொருட்கள் சுவிட்சர்லாந்தைவிட ஜேர்மனியில் விலை குறைவாக கிடைக்கின்றன.

ஜேர்மனியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, எல்லையிலுள்ள ஜேர்மன் மாகாணமான Baden-Württemberg, தடுப்பூசி பெற்றவர்கள் மற்றும் கொரோனாவிலிருந்து விடுபட்டவர்கள் தவிர மற்றவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்த கட்டுப்பாடுகள் சுவிட்சர்லாந்து மற்றும் பிற நாடுகளிலிருந்து எல்லை தாண்டி ஷாப்பிங் மற்றும் பொழுதுபோக்கு காரணங்களுக்காக ஜேர்மனிக்கு வருவோர் மீது தாக்கத்தை ஏற்படுத்த உள்ளன.

ஒரு நல்ல விடயம், சுவிஸ் கொரோனா சான்றிதழ் ஜேர்மனியிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளவும்.

மேலும் நீங்கள் அறிந்துகொள்ளவேண்டிய சில விடயங்களும் உள்ளன...

ஜேர்மனிக்குள் நுழையவேண்டுமானால் அதற்கு என்ன தேவை?

ஜேர்மனியில் நுழைய 3G விதிகள் (கொரோனா தடுப்பூசி பெற்றவர்கள், கொரோனாவிலிருந்து விடுபட்டவர்கள் மற்றும் கொரோனா பரிசோதனையில் தங்களுக்கு கொரோனா இல்லை என நிரூபிப்பவர்களுக்கு மட்டுமே சில இடங்களுக்குச் செல்ல அனுமதி) அவசியம் என்றாலும், 24 மணி நேரத்திற்கு குறைவாக ஜேர்மனியில் நேரம் செலவிடுவோருக்கு இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, மிக நீண்ட ஷாப்பிங் செல்லாதபட்சத்தில் நீங்கள், தடுப்பூசி பெற்ற, அல்லது கொரோனாவிலிருந்து விடுபட்ட மற்றும் கொரோனா இல்லை என்பதற்கான ஆதாரங்கள் இல்லாமலே ஜேர்மனிக்குள் நுழையலாம்.

அத்துடன், ஜேர்மனியின் நுழைவுப்படிவத்தையும் நீங்கள் பூர்த்தி செய்யவேண்டியதில்லை.  

சுவிஸ் நாட்டவர்கள் எல்லை தாண்டி ஷாப்பிங் செய்ய ஜேர்மனிக்கு செல்லலாமா?

தாராளமாக செல்லலாம். ஆனால், நீங்கள் என்ன வாங்கப்போகிறீர்கள் என்பதைப் பொருத்து நீங்கள் அதற்கேற்றாற்போல் ஆதாரங்களை சமர்ப்பிக்கவேண்டியிருக்கும்.

உதாரணமாக பல்பொருள் அங்காடி, மருந்தகங்கள், எரிபொருள் நிலையம் அல்லது பேக்கரிக்கு செல்வதென்றால் நீங்கள் உங்கள் கொரோனா சான்றிதழைக் காட்டவேண்டியதில்லை.

ஆனால், மின்னணு உபகரணங்கள், ஆடைகள் போன்ற அத்தியாவசியமற்ற பொருட்களை விற்கும் கடைகளுக்குச் செல்லவேண்டுமானால் 3G விதிக்கு உட்படவேண்டும்.

நண்பர்களை சந்திப்பதற்காக ஜேர்மனிக்கு செல்லலாமா?  

Baden-Württembergஇல் தனியாக மக்களை சந்திப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நீங்கள் கொரோனா தடுப்பூசி பெற்றவர் அல்லது கொரோனாவிலிருந்து விடுபட்டவராக இருந்தால் மட்டுமே உங்களுக்கு அனுமதி. 

இல்லையென்றால், ஒரு வீட்டைச் சேர்ந்தவர்கள் ஒருவரை மட்டுமே சந்திக்க அனுமதி.

கிறிஸ்துமஸ் சந்தைக்கு செல்வதற்காக ஜேர்மனிக்குள் நுழையலாமா?  

பொதுவாகக் கூறினால், சுற்றிலும் வேலி எழுப்பப்படாத வெளியிடங்களில் அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் சந்தைக்குச் செல்வதற்கு கொரோனா சான்றிதழ் அவசியமில்லை.

ஆனாலும், இந்த விதிகள் மாகாணத்துக்கு மாகாணம் மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

காபி ஷாப் மற்றும் மதுபான விடுதிகளுக்குச் செல்லலாமா?

Baden-Württembergஇலுள்ள மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்களுக்குள் நுழையவேண்டுமானால் நீங்கள் 2G விதிகளுக்குட்படவேண்டும். அதாவது, நீங்கள் கொரோனா தடுப்பூசி பெற்றவர் அல்லது கொரோனாவிலிருந்து விடுபட்டவராக இருந்தால் மட்டுமே உங்களுக்கு அனுமதி.

இதுபோக, முடி திருத்தும் நிலையங்களுக்கு செல்ல 3G விதிகளுக்கும் ஹொட்டல்களுக்கு செல்ல 2G ப்ளஸ் விதிகளுக்கும், திரையரங்கம், இசை நிகழ்ச்சிகள் மற்றும் அருங்காட்சியங்களுக்குச் செல்ல 2G விதிகளுக்கும் உட்பட்டிருக்கவேண்டும்.  

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US