ஒருவர் கூட தடுப்பூசி போட வரவில்லை! சுவிட்சர்லாந்தில் மிகப்பெரிய தடுப்பூசி முகாம் என்ற பெயரில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம்!
சுவிட்சர்லாந்தில் மிகப்பெரிய தடுப்பூசி பிரச்சாரத்தில் ஒருவர் கூட தடுப்பூசி போட்டுக்கொள்ளாத சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரத்தில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 24, 2021) மிகப்பெரிய கோவிட்-19 தடுப்பூசி பிரச்சாரம் நடக்க திட்டமிடப்பட்டிருந்தது.
உள்ளூர் நேரப்படி காலை 9 மணி முதல் 11 மணி வரை, சூரிச்சில் உள்ள பீட்டர் அண்ட் பவுல் தேவாலயத்தில் இந்த தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டது. ஆனால், ஒருவர் கூட அங்கு வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்பதே அவலம்.
Picture: Facebook/PfarreiPeterPaul
ஏனெனில் திட்டமிட்ட அனைத்தும் தவறாகிவிட்டது என அந்த தேவாலயத்தின் பாதிரியார் மார்ட்டின் ஸ்டீவன் (Priest Martin Stewen) கூறுகிறார்.
முதலில் அந்த நடமாடும் தடுப்பூசி வாகனம் காலையில், உஸ்டரில் உள்ள ஒரு கேரேஜில் சிக்கிசிக்கியுள்ளது. இதுவே முதல் தடையாக மாறியது என மார்ட்டின் ஸ்டீவன் கூறினார்.
ஆனால் அதை விட பெரிய சிக்கல் என்னவென்றால், தடுப்பூசி பிரச்சாரம் தொடர்பாக எந்த வித விளம்பரமும் அறிவிப்புகளும் தடுப்பூசி குழுவால் செய்யப்படவில்லை என அவர் குற்றம் சாட்டினார். இது குறித்து பாதிரியார் மார்ட்டின் ஸ்டீவன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டு தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மிகப்பெரிய தடுப்பூசி பிரச்சாரம் என திட்டமிட்டு ஒருவர் கூட தடுப்பூசி செலுத்தாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Picture: Symbolbild Enzo Lopardo
Picture: Facebook/PfarreiPeterPaul