சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர் பணியாளர்கள் தேவை: அரசுக்கு முன்வைக்கப்பட்டுள்ள யோசனை
பல ஐரோப்பிய நாடுகளில், பணியாளர் பற்றாக்குறை ஒரு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துவருகிறது. ஜேர்மனி போன்ற நாடுகள் வெளிப்படையாகவே புலம்பெயர் பணியாளர்களுக்கு அழைப்பு விடுத்துவருகின்றன.
சுவிட்சர்லாந்தும் விதிவிலக்கல்ல
சுவிட்சர்லாந்திலும், திறன்மிகுப் பணியாளர் பற்றாக்குறை பெருமளவில் நிலவுகிறது. பணியாளர் பற்றாக்குறை பிரச்சினைக்கு சரியான தீர்வு காணாவிட்டால், அது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.
2025இல் சுவிட்சர்லாந்தில் 340,000 பேர் பணி ஓய்வு பெற இருக்கிறார்கள்.
ஓரளவு, அதாவது, 50,000 புலம்பெயர் பணியாளர்கள் சுவிட்சர்லாந்துக்கு வந்தால் கூட, 2030 வாக்கில் 400,000 பணியிடங்கள் காலியாக இருக்கும் ஒரு நிலை காணப்படுகிறது.
பொருளாதார பாதிப்பு ஏற்படும்
இப்படி பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுவதால், பெரும் பொருளாதார பிரச்சினைகளும் ஏற்பட உள்ளன. ஆண்டொன்றிற்கு, சுமார் 5 பில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் அளவுக்கு இழப்பு ஏற்படலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.
ஆக, உற்பத்தி பாதிப்பு, பொருளாதார முன்னேற்றம் பாதிப்பு, அதன் மூலம் நாட்டின் செழிப்பும் பாதிக்கப்படலாம்.
பற்றாக்குறையை எதிர்கொள்ள தீர்வுகள்
பணியாளர் பற்றாக்குறையை சமாளிக்க, தொழிலாளர் அமைப்புகள் ஏற்கனவே பணியிலிருப்போரைத் தக்கவைக்கவும், புதிதாக பணியாளர்களை ஈர்க்கவும் நடவடிக்கைகளைத் துவங்கியுள்ளன.
அதற்காக, ஊதிய உயர்வு மற்றும் பணி நேரத்தில் நெகிழ்வு என பல நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன.
இதுபோக, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியே இருந்தும் புலம்பெயர் பணியாளர்களை சுவிட்சர்லாந்துக்குள் அனுமதிக்க அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை மூன்றாம் நாட்டவர்களை நாட்டுக்குள் அனுமதிக்க அரசியல் ரீதியாக எப்போதுமே பெரும் எதிர்ப்பு காணப்படும் என்பதால், அதை சுவிஸ் அரசு எப்படி செயல்படுத்தப்போகிறது என்பது தெரியவில்லை.
இப்போதுகூட, பெண்களை வேலைக்கு வைப்போம். அதனால், பல ஆயிரம் பணியிடங்கள் நிரப்பட்டமுடியும் என ஒரு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |