உலகின் நீளமான ரயில்வே சுரங்கப்பாதையில் தடம் புரண்ட ரயில்: போக்குவரத்து கடும் பாதிப்பு
சுவிட்சர்லாந்தில் அமைந்துள்ள உலகின் நீண்ட ரயில்வே சுரங்கப் பாதையில் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டதையடுத்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்திலுள்ள Gotthard Base Tunnel, உலகிலேயே நீளமான ரயில்வே சுரங்கப்பாதையாகும். அது, ஆல்ப்ஸ் மலையின் ஊடாக அமைக்கபட்டுள்ளது.
அந்த சுரங்கப்பாதையின் நீளம் 57 கிலோமீற்றர் ஆகும்.
ரயில் தடம் புரண்டதால் போக்குவரத்து பாதிப்பு
அந்த ரயில்வே சுரங்கப்பாதையில் நேற்று முன்தினம் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது. மீண்டும் அந்த பாதையில் போக்குவரத்து துவங்க, 16ஆம் திகதி வரை ஆகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பாதையில் ரயில் தடம் புரண்டதால், மாற்றுப்பாதை ஒன்றில் சில பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன என்றாலும், பயணிகள் கூடுதலாக ஒரு மணி நேரம் பயணிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சரக்கு ரயிலின் தடம் புரண்ட சில பெட்டிகளில் அபாயகரமான ரசாயனங்களும் உள்ளன என்றாலும், எந்தப் பெட்டியிலும் கசிவு எதுவும் ஏற்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.