சுவிஸ் மக்கள் வீடு கிடைக்காமல் திண்டாடுவதற்கு புலம்பெயர்ந்தோர்தான் காரணம்?
சுவிட்சர்லாந்தில், அந்நாட்டு மக்கள் வீடு கிடைக்காமல் தவிப்பதற்கு புலம்பெயர்ந்தோர்தான் காரணம் என ஒரு செய்தி உலவுகிறது.
அது உண்மையா?
சுவிஸ் மக்கள் கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு
வலதுசாரி சுவிஸ் மக்கள் கட்சி, சுவிட்சர்லாந்தில் மக்கள் வீடு கிடைக்காமல் தவிப்பதற்கு வெளிநாட்டவர்கள்தான் காரணம் என ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
அக்கட்சி, சுவிட்சர்லாந்தில் நிலவும் பல பிரச்சினைகளுக்கும் சுவிட்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டவர்கள்தான் காரணம் என நீண்ட காலமாகவே குற்றம் சாட்டி வந்துள்ளது.
சுவிஸ் மக்களுக்கு கிடைக்கவேண்டிய வேலைவாய்ப்பை வெளிநாட்டவர்கள் தட்டிப்பறித்துக்கொள்வதாகவும், தங்கள் நாட்டு மக்களுக்கு கிடைக்கவேண்டிய அரசு உதவியை வெளிநாட்டினர் தவறாக பயன்படுத்துவதாகவும், வெளிநாட்டவர்கள் தங்கள் குப்பையை சரியாக மறுசுழற்சி செய்வதில்லை என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளை அந்தக் கட்சி தெரிவித்துவந்துள்ளது.
BNMUGP
புலம்பெயர்ந்தோர் மீது புதிதாக வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
தற்போது, புலம்பெயர்ந்தோர் மீது மற்றொரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது சுவிஸ் மக்கள் கட்சி.
ஆம், சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளில் நிலவும் வீடு பற்றாக்குறைக்கும் புலம்பெயர்ந்தோர்தான் காரணம் என அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது, சுவிஸ் மக்கள் கட்சியைச் சேர்ந்த Michael Buffat என்பவர் ஆவார்.
அவர், தற்போது சுவிட்சர்லாந்தில் வாழும் 70,000 உக்ரைன் அகதிகள் உட்பட, வெளிநாட்டவர்கள் வீடுகளில் இடம் பிடித்துக்கொண்டதால் சுவிஸ் நாட்டவர்கள் பலருக்கு வீடுகள் கிடைப்பதில்லை என கூறியுள்ளார்.
NN6T0Q
இந்தக் குற்றச்சாட்டு உண்மையா?
சொல்லப்போனால், சுவிஸ் மக்கள் கட்சியின் கூற்றில் பாதி உண்மைதான்! அதாவது, சுவிட்சர்லாந்தில் வீடு கிடைப்பதில் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன.
ஆனால், அதற்கு புலம்பெயர்ந்தோர் காரணமா? இது ஒரு சிக்கலான விடயமாகும்.
ஏனென்றால், சுவிட்சர்லாந்தில் வீடுகள் கிடைப்பதில் பிரச்சினை இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
அவற்றில் முக்கியமானது, கட்டுமானப்பணிக்கு ஆகும் செலவீனம். கட்டுமானப் பணிக்கான செலவுகள் அதிகரித்துள்ளதால், சுவிட்சர்லாந்தில் வீடு கட்டுதல் குறைந்துள்ளது.
இன்னொரு முக்கிய விடயம், சுவிட்சர்லாந்து ஒரு சிறிய நாடு. ஆகவே, வீடு கட்டுவதற்கான நிலப்பரப்பு அங்கு குறைவாகவே உள்ளது, குறைந்தும் வருகிறது.
இந்த இரண்டு காரணங்களுக்காகவும், புலம்பெயர்ந்தோரை குற்றம் சாட்டமுடியாது!
இந்த குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்துள்ள சுவிஸ் அரசு, புலம்பெயர்ந்தோர், சுவிஸ் குடிமக்களைவிட குறைவான இடங்களிலேயே வாழ்ந்துவருவதாகவும், வேறு வார்த்தைகளில் கூறினால், புலம்பெயர்ந்தோர் தங்குவதற்காக தேடும் குடியிருப்பு வகைகள், எக்காரணம் கொண்டும் சுவிஸ் மக்கள் நிரந்தரமாக வாழும் இடங்களுக்கு போட்டியாக அமைவதில்லை என்றும் கூறியுள்ளது.
இன்னும் விளக்கமாகச் சொன்னால், 2021ஆம் ஆண்டின் தரவுகளின்படி, சராசரியாக சுவிஸ் மக்கள் வாழும் வீட்டின் பரப்பளவு 52.2 சதுரமீற்றர்கள்.
அதுவே, புலம்பெயர்ந்தோர் தேடும் வீடுகளின் அளவோ 37.6 சதுர மீற்றர்கள்தான் என்கிறது சுவிஸ் அரசு.
அத்துடன்,உக்ரைன் அகதிகளை எடுத்துக்கொண்டாலோ, அவர்கள் சுவிஸ் மக்களைவிடக் குறைவான இடத்தையே பயன்படுத்துகிறார்கள்.
அவர்கள் எப்போதும் தங்கள் சொந்த குடியிருப்புகளில் வாழ்வதில்லை. சுவிட்சர்லாந்தில் ஏற்கனவே வாழும் மக்களுடனோ, அல்லது பலர் சேர்ந்து வாழும் கூட்டு வீடுகளிலோதான் அவர்கள் வாழ்கிறார்கள் என்கிறது சுவிட்சர்லாந்து அரசு.
Images: Expatica