இஸ்ரேல் ஈரான் பிரச்சினையில் சுவிட்சர்லாந்தின் முக்கிய பங்கு: அது என்ன என்று தெரியுமா?
இஸ்ரேல் ஈரான் பிரச்சினையில் சுவிட்சர்லாந்துக்கு ஒரு மறைமுகப் பங்கு உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், பல ஆண்டுகளாக, ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் தூதரக உறவுகளை பகிர்ந்துகொள்ள சுவிட்சர்லாந்துதான் பாலமாக செயல்பட்டுவருகிறதாம்.
நேரடியாக பேசிக்கொள்ளாத அமெரிக்காவும் ஈரானும்
அதாவது, ஈரானும் அமெரிக்காவும் நேரடியாக பேசிக்கொள்வதில்லை. அதற்கு பின்னால் ஒரு பெரிய வரலாறே உள்ளது.
ஈரான் புரட்சியைத் தொடர்ந்து, ஈரான் தலைவரான முகமது ரெஸா பஹ்லவி என்பவருக்கு அமெரிக்கா அடைக்கலம் கொடுத்துள்ளது. அதனால் கோபமடைந்த ஈரான், 1979ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 4ஆம் திகதி, ஈரான் தலைநகரான டெஹ்ரானிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் 53 அமெரிக்க தூதரக அலுவலர்கள் மற்றும் குடிமக்களை பிணைக்கைதிகளாக பிடித்துவைத்துக்கொண்டது.
Photo Credit: AP
அமெரிக்க ஜனாதிபதி எவ்வளவு முயன்றும் தன் மக்களை மீட்கமுடியவில்லை. பின்னர் வேறொரு நாட்டின் மத்தியஸ்தத்தைத் தொடர்ந்து 444 நாட்களுக்குப் பிறகே அந்த அமெரிக்கர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். ஆக, அதற்குப் பின் அமெரிக்கா ஈரானுக்கிடையிலான தூதரக உறவு முற்றுப்பெற்றுள்ளது.
இஸ்ரேல் ஈரான் பிரச்சினையில் சுவிட்சர்லாந்தின் பங்கு
தற்போது, இஸ்ரேல் ஈரான் நாடுகளுக்கிடையே மோதல் ஏறட்டுள்ள நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கினால், அமெரிக்க படைகளுக்கு பிரச்சினை ஏற்படும் என்ற விடயத்தைக் கூட ஈரான் நேரடியாக அமெரிக்காவுடன் பகிர்ந்துகொள்லவில்லை.
அதேபோல, அமெரிக்காவும் நேரடியாக ஈரானுடன் எந்த விடயத்தையும் பகிர்ந்துகொள்ளவில்லை. அங்குதான் சுவிட்சர்லாந்தின் பங்களிப்பு இரு நாடுகளுக்கும் தேவைப்படுகிறது.
ஆக, இஸ்ரேல் ஈரான் மோதல் தொடர்பில், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான தகவல் தொடர்புகள் நடுநிலை நாடான சுவிட்சர்லாந்து மூலமாகத்தான் நடைபெறுகின்றன.
இப்படி அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் சுவிட்சர்லாந்து தகவல் தொடர்புகளை பகிர்ந்துகொள்வது குறித்த விடயம் பலருக்கும் தெரியாத நிலையில், தற்போது இஸ்ரேல் ஈரான் மோதலைத் தொடர்ந்தே, இந்த உண்மை வெளியாகியுள்ளது.
அதற்கு ஆதாரமாக, ஈரான் ராணுவ தலைவர்களில் ஒருவரான முகமது பகேரி என்பவர், அரசு தொலைக்காட்சியிலேயே, இஸ்ரேல் ஈரான் பிரச்சினையில் அமெரிக்கா தலையிட்டால், மற்ற நாடுகளில் முகாமிட்டுள்ள அமெரிக்கப் படைகள் தாக்குதலுக்குள்ளாகும் என நாங்கள் சுவிஸ் தூதரகம் வாயிலாக அமெரிக்காவுக்குத் தெரியப்படுத்தியுள்ளோம் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |