மன்னர் சார்லசின் முடிசூட்டுவிழாவை அலட்சியப்படுத்துகிறதா அவுஸ்திரேலியா?
உலகில் முக்கிய நிகழ்வுகள் நடக்கும்போது, அவுஸ்திரேலியாவின் சிட்னி ஓபரா ஹவுஸ், பல வண்ண விளக்குகளால் ஜொலிக்கும்.
இன்று அவுஸ்திரேலியாவின் தலைவரான மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழா. ஆனால், சிட்னி ஓபரா ஹவுஸில் விளக்குகளையே காணோம்!
முடிசூட்டுவிழாவை அலட்சியப்படுத்துகிறதா அவுஸ்திரேலியா?
மன்னர் சார்லசுடைய தலைமையின் கீழ் பிரித்தானியா மட்டுமின்றி அவுஸ்திரேலியா, கனடா, Grenada, ஜமைக்கா, நியூசிலாந்து, பாப்புவா நியூகினியா உட்பட 14 நாடுகள் உள்ளன என்பதை பலரும் அறிந்திருக்கக்கூடும்.
ஆனால், மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்குப் பின் பல நாடுகள் மன்னர் சார்லசை தங்கள் நாட்டின் தலைவராக ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டிவருகின்றன.
அவுஸ்திரேலியாவில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், சார்லஸ் தங்கள் நாட்டின் தலைவராக இருப்பதற்கு அவுஸ்திரேலிய மக்களிடையே ஆதரவு குறைந்துவருவதைக் காட்டியுள்ளன.
அவுஸ்திரேலியா கூறியுள்ள காரணம்
ஆக, அவுஸ்திரேலியாவின் தலைவரான மன்னர் சார்லஸ் முடிசூட்டப்படும் நாளாகிய இன்று, அவுஸ்திரேலியாவின் சிட்னி ஓபரா ஹவுஸில் விளக்குகள் எரியவைக்கப்படவில்லை.
இது மன்னரை புறக்கணிக்கும் செயலா என்றால், இல்லை, மின்சாரத்தை மிச்சம் பிடிப்பதற்கான, பணத்தை மிச்சப்படுத்துவதற்கான நடவடிக்கை இது என்கிறது அரசு.