சிட்னி தேவாலய கத்திக்குத்து: 16 வயது சிறுவனுக்கு மீது பயங்கரவாத குற்றச்சாட்டு!
அவுஸ்திரேலியாவின் சிட்னி தேவாலய கத்திக்குத்து சம்பவத்தில் 16 வயது சிறுவன் மீது தீவிரவாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
திடீர் தாக்குதல் மற்றும் கலவரம்
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் தேவாலய சபையில் மத தலைவரை கத்தியால் குத்தியதற்காக 16 வயது சிறுவன் ஒருவர் மீது தீவிரவாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
தாக்குதலில் படுகாயமடைந்த அந்த சிறுவன் தற்போது காவல் துறை காவலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குற்றம் நிரூபணம் செய்யப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை வரை கிடைக்க வாய்ப்புள்ளது என தெரியவந்துள்ளது.
பொலிஸார் விசாரணை
நடந்த சம்பவம் குறித்து, (New South Wales) மாநில காவல் துறை ஆணையர் Karen Webb செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், "விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஆறு முறை குத்தப்பட்டதாகவும், தாக்குதல் நடத்த தேவாலயத்திற்கு 90 நிமிடங்கள் பயணம் செய்ததாகவும் காவல்துறை தரப்பில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது" என்றார்.
மதகுரு மாரி மாரி இம்மானுவேல் மீதான தாக்குதலுக்கு பிறகு, தேவாலயத்திற்கு வெளியே கலவரம் வெடித்தது. சந்தேக நபரை தங்களிடம் ஒப்படைக்க கோரி கூட்டம் ஆவேசமடைந்தது.
கலவரத்தில் 50 க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர் மற்றும் 20 காவல் துறை வாகனங்கள் சேதமடைந்தன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |