சச்சின் டெண்டுல்கர் மற்றும் லாராவை கௌரவித்த சிட்னி கிரிக்கெட் மைதானம்!
கிரிக்கெட் வரலாற்றில் மகத்தான வீரர்களாக அறியப்படும் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரயன் லாராவை, அவுஸ்திரேலியாவின் சிட்னி கிரிக்கெட் மைதானம் கௌரவித்துள்ளது.
கிரிக்கெட் ஜாம்பவான்கள்
கிரிக்கெட்டில் வரலாற்றில் பல சாதனைகளை படைத்த மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் பிரயன் லாராவையும், இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரையும் அவுஸ்திரேலியாவின் சிட்னி கிரிக்கெட் மைதானம் கௌரவித்துள்ளது.
இன்று சிட்னி மைதானத்தில் நடைபெற்ற இந்த வாயில் (Lara-Tendulkar gates) திறப்பு விழாவில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.
@wikipedia
சச்சின் மற்றும் லாராவின் நினைவாக மைதானத்தின் வாயிலுக்கு இருவரது பெயரும் சூட்டப்பட்டுள்ளது. இந்த வாயிலை கடந்து தான் ஆடுகளத்துக்குள் போட்டியில் பங்கு பெறும் அணியின் வீரர்கள் செல்ல முடியும் என சிட்னி மைதானத்தின் நிர்வாக குழு தெரிவித்துள்ளது.
சச்சினுக்கு பிடித்த மைதானம்
லாரா மற்றும் சச்சினின் கிரிக்கெட் கேரியரில் சிட்னி கிரிக்கெட் மைதானத்திற்கு பிரத்யேக இடமுள்ளது. லாரா, தனது முதல் டெஸ்ட் கிரிக்கெட் சதத்தை சிட்னி மைதானத்தில் பதிவு செய்திருக்கிறார்.
1993-ல் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் 277 ஓட்டங்கள் குவித்திருக்கிறார். சிட்னி மைதானத்தில் 5 டெஸ்ட் போட்டிகளில் சச்சின் விளையாடியுள்ளார். அதிகபட்சமாக இந்த மைதானத்தில் 241 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இங்கு இவரது துடுப்பாட்ட சராசரி 157 ஆகும்.
Two legends of the game, now part of this ground forever ?
— Sydney Cricket Ground (@scg) April 24, 2023
We have today unveiled the Lara-Tendulkar gates, where all visiting cricketers will take to the field when playing at the SCG. pic.twitter.com/cqYEZQ0Pp9
“இந்தியாவுக்கு வெளியே சிட்னி கிரிக்கெட் மைதானம் எனக்கு ரொம்பவே பிடித்த ஒன்று. எனது முதல் அவுஸ்திரேலிய (1991-92) பயணத்திலிருந்து இனிதான நினைவுகளை இந்த மைதானத்துடன் கொண்டுள்ளேன்” என சச்சின் தெரிவித்துள்ளார்.