அவுஸ்திரிலியாவில் நீச்சல் பயிற்சியாளரை கடித்து விழுங்கிய சுறா: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள்!
அவுஸ்திரேலியாவில் சிட்னி நகரில் உள்ள கடற்கரையில் சைமன் நெல்லிஸ்ட் என்ற டைவிங் பயிற்சியாளரை 10 அடி நீளம் கொண்ட வெள்ளை சுறா கடித்து விழுங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சிட்னியின் லிட்டில் பே கடற்கரையில் சைமன் நெல்லிஸ்ட் என்ற டைவிங் பயிற்சியாளர் கடலில் நீச்சல் அடித்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென குறைந்தது 10 அடி நீளம் கொண்ட வெள்ளை சுறா ஒன்று அவரை தாக்கியுள்ளது.
#sharkattack in Sydney today!!! Insane????? #shark #attack #sydney. We would swim there as a kid!!In Australia don’t have to worry about the sharks because the crocodiles eat them and we don’t have to worry about crocodiles because the stingers kill everything; sorry family pic.twitter.com/LqLVuJjGyt
— Pragma (@pragma2012) February 17, 2022
சைமன் அந்த சுறாவிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது அவரை அந்த சுறா கடித்து விழுங்கிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
மேலும் சுறா சைமனை தாக்கும் போது அருகில் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் என மக்கள் கூட்டம் இருந்த போதும் அவரை காப்பாற்ற முடியாமல் போனது பெரும் சோகத்தை அப்பகுதியில் ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் தாக்கிய அந்த சுறாவை பிடிக்க குண்டுகள் அமைத்து ட்ரோன்கள் மூலம் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது, ஆனால் அந்த தாக்குதலுக்கு பிறகு அந்த சுறா அந்த கடல் பகுதியில் தென்படவில்லை என்பதால் தேடுதல் வேட்டை நிறுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து சைமனின் சக டைவிங் தோழர்கள் அவருக்காக அவுஸ்திரிலியாவின் போண்டி கடற்கரையில் அவர் ஆன்மா அமைதி அடையவேண்டி நீச்சல் அடித்து மரியாதையை செலுத்தினர்.
மேலும் 1963 ஆம் ஆண்டு பிறகு நடந்த முதல் சுறா தாக்குதல் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.