ருத்ரதாண்டவமாடிய சோபியா! அடிலெய்டு அணியை நொறுக்கிய சிட்னி சிக்ஸர்ஸ்
Sydney sixers beat adelaide strikers: WBBL போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸை வீழ்த்தியது.
கரேன் ரோல்டன் ஓவல் மைதானத்தில் நடந்த WBBL டி20 போட்டியில், அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிட்னி சிக்ஸர்ஸ் வீழ்த்தியது.
அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் ஆல்அவுட்
சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகளுக்கு இடையிலான WBBL டி20 போட்டி கரேன் ரோல்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது.
முதலில் ஆடிய அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 18.1 ஓவர்களில் 124 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
அதிகபட்சமாக லௌரா வோல்வார்ட் 37 (26) ஓட்டங்களும், டாலியா மெக்ராத் 31 (32) ஓட்டங்களும் எடுத்தனர். மெலி கெர் 3 விக்கெட்டுகளும், லௌரன் சீத்தல், கார்ட்னர் மற்றும் காய்ட் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
சோபியா ருத்ரதாண்டவம்
பின்னர் களமிறங்கிய சிட்னி சிக்ஸர்ஸ் அணியில் சோபியா டங்க்லி மற்றும் எல்லிஸ் பெர்ரி ருத்ரதாண்டவம் ஆடினர்.
சரவெடி ஆட்டமாடிய சோபியா டங்க்லி (Sophia Dunkley) 44 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 72 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
எனினும் களத்தில் நின்ற எல்லிஸ் பெர்ரி (Ellyse Perry) 45 ஓட்டங்கள் (2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள்) விளாச, சிட்னி சிக்ஸர்ஸ் அணி 15 ஓவர்களில் 126 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
