பிரபல நடிகையின் குளியல் நீரில் தயாரிக்கப்பட்ட சோப் - விலை என்ன தெரியுமா?
பிரபல நடிகையின் குளியல் நீரில் தயாரிக்கப்பட்ட சோப் விற்பனைக்கு வர உள்ளது.
நடிகையின் குளியல் நீரில் சோப்
ஹாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் 27 வயதான சிட்னி ஸ்வீனி.
50/50 என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி வரும் இவர், தற்போது ஆண்களுக்கான சோப் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.
டாக்டர் ஸ்குவாட்ச் என்ற நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்படும் இந்த சோப்பானது, பைன் மரப்பட்டையின் பிசின் உள்பட சில பொருள்களுடனான கலவையுடன், சிட்னி ஸ்வீனியின் குளியல் நீர் சேர்த்து தயாரிக்கப்பட்டுள்ளதாம்.
இது தொடர்பான அறிவிப்பை, அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஒரு சோப் விலை
இந்த சோப்பின் விலை 8 அமெரிக்கா டொலர்(இந்திய மதிப்பில் ரூ.684) எனவும், ஜூன் 6 ஆம் திகதி விற்பனைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 5000 சோப்புகள் மட்டுமே விற்பனைக்கு வர உள்ள நிலையில், ஜூன் 4 ஆம் திகதி வரை முன்பதிவு செய்பவரில் முதல் 100 பேருக்கு இலவசமாக சோப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிட்னி ஸ்வீனிக்கு பெரியளவிலான ரசிகர்கள் இருப்பதால், பலரும் இப்போதே முன்பதிவு செய்ய துவங்கியுள்ளனர். அதேவேளையில், பலரும் இதனை விமர்சித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |