15 ஓட்டங்களில் சுருண்ட அணி! கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகக்குறைந்த ஸ்கோர்..உருகுலைத்த இருவர்
பிக்பாஷ் லீக் தொடரில் சிட்னி தண்டர் அணி 15 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
பிக்பாஷ் லீக்
சிட்னியில் இன்று நடந்த பிக்பாஷ் லீக் தொடர் போட்டியில் சிட்னி தண்டர்ஸ் மற்றும் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் 9 விக்கெட்டுக்கு 139 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக கிறிஸ் லின் 36 ஓட்டங்கள் எடுத்தார்.
தாக்குதல் பந்துவீச்சு
பின்னர் களமிறங்கிய சிட்னி தண்டர் அணியின் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அடிலெய்டு அணியின் தோர்டன், அகர் இருவரும் புயல்வேகப்பந்து வீச்சினால் சிட்னி அணியை உருகுலைத்தனர்.
அந்த அணி மீண்டு வர முடியும் என்ற நினைப்பதற்கு கூட அடிலெய்டு பந்துவீச்சாளர்கள் நேரம் கொடுக்கவில்லை.
Adam Hose takes flight! ? #BBL12 pic.twitter.com/V1G0dVWdFb
— KFC Big Bash League (@BBL) December 16, 2022
மிகக்குறைந்த ஸ்கோர்
இறுதியில் சிட்னி அணி 5.5 ஓவர்களில் 15 ஓட்டங்களுக்கு சுருண்டது. கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய தொடர் ஒன்றில் ஒரு அணி இந்த அளவுக்கு குறைந்த ஓட்டங்களுக்கு சுருண்டது இதுவே முதல் முறையாகும்.
WHAT A LEAP!!
— cricket.com.au (@cricketcomau) December 16, 2022
Matt Short gets vertical to kickstart an incredible collapse from the Thunder! #BBL12 pic.twitter.com/3no1FN73uE
அடிலெய்டின் தோர்டன் 5 விக்கெட்டுகளையும், அகர் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.