மேக்ஸ்வெல், ஸ்டோய்னிஸ் அணி அதிர்ச்சி தோல்வி! 5 விக்கெட் வீழ்த்தி பிக்பாஷ் கிண்ணக் கனவை கலைத்த வீரர்
பிக்பாஷ் லீக் நாக்அவுட் சுற்றில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறியது.
19 ஓவர் போட்டி
மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகளுக்கு இடையிலான நாக்அவுட் போட்டி சிட்னி ஷோகிரவுண்ட் மைதானத்தில் நடந்தது.
வார்னரின் சிட்னி தண்டர் முதலில் களமிறங்கியது. ஆனால் மின்னல் வானிலை காரணமாக தடைப்பட்டது.
This was close...
— KFC Big Bash League (@BBL) January 22, 2025
Tom Curran looked to have caught Matthew Gilkes, but the Thunder batter has survives! #BBL14 pic.twitter.com/KXGNye1YRb
பின்னர் 19 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டு சிட்னி அணி தொடர்ந்து ஆடியது. அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 135 ஓட்டங்கள் எடுத்தது.
ஒலிவர் டேவிஸ் (Oliver Davies) 36 (35) ஓட்டங்களும், மேத்யூ கில்க்ஸ் (Matthew Gilkes) 28 (18) ஓட்டங்களும் எடுத்தனர். டாம் கரன், உஸாமா மிர் தலா 2 விக்கெட்டுகளும், சிடில், வாரன் மற்றும் ஸ்டோய்னிஸ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
அதனைத் தொடர்ந்து, களமிறங்கிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. க்ளென் மேக்ஸ்வெல் மட்டும் பவுண்டரிகளை விரட்டி போராடினார்.
மெக்கான்ட்ரோ அபாரம்
ஆனால் அவர் 28 (21) ஓட்டங்கள் எடுத்த நிலையில் சங்கா ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
Glenn Maxwell is OUT.
— KFC Big Bash League (@BBL) January 22, 2025
Tanveer Sangha does the damage in a HUGE wicket for the Thunder. #BBL14 pic.twitter.com/l9dA7hUV4g
அதன் பின்னர் வந்த வீரர்கள் நாதன் மெக்கான்ட்ரோ பந்துவீச்சில் விக்கெட்டை இழக்க, மெல்போர்ன் அணி 18 ஓவரில் 114 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
4 ஓவர்கள் வீசிய நாதன் மெக்கான்ட்ரோ (Nathan McAndrew) 16 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்து ஆட்டநாயகன் விருதை கைப்பற்றினார்.
Three wickets for Nathan McAndrew!
— KFC Big Bash League (@BBL) January 22, 2025
Hilton Cartwright's gone, and the Thunder are so close now. #BBL14 pic.twitter.com/QxB77Zeffs
The best figures in a BBL finals match. Nathan McAndrew was outstanding with the ball! #POTM #BBL14 pic.twitter.com/OtkwSbMYuk
— KFC Big Bash League (@BBL) January 22, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |