புதிய கொரோனா வைரஸ்-பழைய கொரோனா வைரஸ்! இரண்டிற்கும் இடையே இருக்கும் அறிகுறிகள் என்ன? வெளியான பட்டியல்
தற்போது புதிய வகை கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸிற்கும், பழைய வைரஸிற்கும் ஆன அறிகுறிகள் என்ன என்பது குறித்து ஆய்வில் தெரியவந்துள்ளது.
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் தீவிரமாக பரவி, லட்சக்கணக்கான உயிர்களை எடுத்து வருகிறது.
இந்நிலையில், பிரித்தானியாவில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அது தீவிரமாக பரவும் தன்மை கொண்டது என்று மக்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரித்தானியாவின் தேசிய புள்ளிவிவரங்களுக்கான அலுவலகத்தின் (ONS) தரவு படி பார்த்தால், புதிய பிரித்தானியா கொரோனா வைரஸிற்கு பல அறிகுறிகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
வேல்ஸ் ஆன்லைன் ஊடகம் வெளியிட்டுள்ளதன் படி பார்த்தால், இந்த நோய்த்தொற்று அறிகுறிகளில் இருமல், சோர்வு மற்றும் தொண்டை புண் ஆகியவை அடங்கும் என்று குறிப்பிட்டுள்ளது.
ஆனால் வயிற்று வலி, சுவை மற்றும் வாசனை இழப்பு ஆகியவை கொரோனாவின் அசல் மாறுபாட்டிற்கான அறிகுறி என்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வைரஸைப் பற்றி ஒரு மாத காலமாக கணக்கெடுப்பை நடத்தி வரும் ஓஎன்எஸ், மூச்சுத் திணறல் மற்றும் தலைவலி போன்ற அறிகுறிகள், கொரோனாவிற்கான அறிகுறிகள் என்ற ஆதாரம் என்று கூறுகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5-ஆம் திகதி முதல் இந்த ஆண்டு ஜனவரி 16-ஆம் திகதிக்குள், கொரோனா நேர்மறை சோதனை பெற்ற நபர்களின் அடிப்படையில், புதிய மற்றும் பழைய கொரோனா வைரஸிற்கான அறிகுறிகள் வெளியாகியுள்ளன.
ஆனால், அவை இரண்டிற்கும் அதிக அளவு வித்தியாசம் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இருமல்
கொரோனா வைரஸிற்கு 28 சதவீத பங்களிப்பு இருந்தால், அதுவே பிரித்தானியாவின் புதிய வகை கொரோனா வைரஸிற்கு 35 சதவீதம் உள்ளது.
தலைவலி
ஓஎன்எஸ் ஆய்வின் படி இரண்டு கொரோனா வைரஸ்களுக்கும் எந்த வித்தியாசம் இல்லை.
சுவை இழப்பு
கொரோனா வைரஸிற்கு ஏறக்குறைய 18 சதவீதம் இழப்பு என்றால், பிரித்தானியாவின் புதிய கொரோனாவுக்கு ஏறக்குறைய 15 சதவீத இழப்பு.
வாசனை இழப்பு
இதற்கு 19 சதவீதம் வாசனை இழப்பு என்றால், பிரித்தானியா வைரஸிற்கு 16 சதவீதம்.
காய்ச்சல்
பிரித்தானியா கொரோனா வைரஸிற்கு 22 சதவீதமும், முன்பு பரவி வரும் கொரோனாவுக்கு 19 சதவிதமும் உள்ளது.
மூச்சு திணறல்
ஓஎன்எஸ் ஆய்வில் இரண்டு வகைகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
தசை வலிகள்
இந்த வைரஸிற்கு 21 சதவீதம் என்றால், பிரித்தானியா வைரஸிற்கு 24 சதவீதம் என்று கூறப்பட்டுள்ளது.
வயிற்று வலி
ஓஎன்எஸ் ஆய்வில் இரண்டு வகைகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
வயிற்றுப்போக்கு
ஓஎன்எஸ் ஆய்வில் இரண்டு வகைகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
தொண்டை வலி
இதற்கு 19 சதவீதம் என்றால், பிரித்தானியா வைரஸிற்கு 22 சதவீதம் வித்தியாசம்.