ஆஸ்துமா வருவது ஏன்? அதனின் அறிகுறிகள் என்ன? வாங்க தெரிந்து கொள்வோம்
சாதாரணமாக சளியில் தொடங்கி படிப்படியாக முன்னேற்றம் அடைந்து மூச்சிளைப்பு உண்டாக்குவது ஆஸ்துமா. ஆஸ்துமா என்பது நுரையீரலில் மூச்சுக்குழாய்களில் உண்டாகும் சுருக்கத்தால் ஏற்படும் சுவாச கோளாறு.
சுவாசப்பாதையில் அடைப்பு ஏற்படும் போது மூச்சு விடுவதில் சிக்கல் உண்டாகும். இந்த நோய் தாக்கியவர்களின் மூச்சுகுழாய் தசைகளில் கசிவு உண்டாகி வீக்கம் அடையும். இந்த வீக்கத்தால் தசைகள் உப்பி மூச்சுக்குழாயை சுருக்கி அதன் துவாரத்தின் சுற்றளவை குறைக்கும்.
அவற்றோடு காற்றுக்குழாய்களான பிராங்கைல் டியூப்ஸ் தன் பங்குக்கு சளியை சுரக்கும். இவை கட்டியாக இருந்து மூச்சுக்குழாய் பாதையை அடைக்கும் போது ஆஸ்துமா உண்டாகிறது. சரி வாங்க ஆஸ்துமா நோய்க்கான அறிகுறிகள் பற்றி இந்த வீடியோவில் பார்க்கலாம்..