பாடசாலை மாணவர்களால் ஏற்படப் போகும் ஆபத்து
கோவிட் நோய் அறிகுறிகள் அற்ற தொற்றாளர்கள் அதிகமானோர் சமூகத்தில் காண முடிவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாடசாலை மாணவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தாமல் ஏனைய வகுப்புகளை திறப்பது மீண்டும் நாட்டினுள் கோவிட் தொற்று பரவுவதற்கு காரணமாக இருக்கும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த காலப்பகுதியை ஒப்பிடும் போது கோவிட் நோயாளர்களிடையே குறைவான நிலை காணப்படுகின்ற போதிலும் இந்த நிலைமை மிகவும் ஆபத்தானதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் பாரிய அளவிலான மக்கள் தடுப்பூசி செலுத்தியுள்ள போதிலும் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தவில்லை. இதனால் அனைத்து வகுப்புகளையும் ஆரம்பிப்பதற்கு முன்னர் சுகாதார வழிக்காட்டல்களை கடுமையாக்க வேண்டும் எனவும் பரவலான கோவிட் பரிசோதனைகளை நாடு முழுவதும் மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.