கொழுப்பு கல்லீரல் நோய் இருப்பதற்கான கண் அறிகுறிகள்.., என்னென்ன தெரியுமா?
கொழுப்பு கல்லீரல் நோய் என்பது கல்லீரல் செல்களில் அதிகப்படியான கொழுப்பு படிவதால் ஏற்படும் ஒரு பொதுவான நிலை.
உடல் பருமன், நீரிழிவு, மது அருந்துதல் மற்றும் மோசமான வாழ்க்கை முறை ஆகியவை இதன் முக்கிய காரணங்களாகும்.
ஆரம்ப கட்டங்களில் கண்டறிந்தால், உணவு முறை மற்றும் உடற்பயிற்சி மாற்றங்கள் மூலம் இதை முழுமையாக குணப்படுத்த முடியும்.
கொழுப்பு கல்லீரல் நோய் ஆரம்பத்தில் பெரும்பாலும் அறிகுறிகள் எதையும் காட்டுவதில்லை.

இருப்பினும், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், உடல் பருமன் உள்ளவர்களுக்கு கொழுப்பு கல்லீரல் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.
அந்தவகையில், கொழுப்பு கல்லீரல் நோய் இருப்பதற்கான கண் அறிகுறிகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
என்னென்ன அறிகுறிகள்?
கண்கள் மஞ்சள் நிறமாக மாறுதல்- கல்லீரலில் கொழுப்பு அதிகமாக சேர்ந்தால், பிலிரூபின் அளவு உயர்ந்து கண்கள் மஞ்சள் நிறமாக மாறலாம்.
கண் வறட்சி மற்றும் எரிச்சல்- கண் வறட்சி, எரிச்சல் போன்ற பிரச்சனைகள் கல்லீரல் செயல்பாடு பாதிக்கப்பட்டிருப்பதைக் குறிக்கலாம்.
கருவளையம் மற்றும் சோர்வான கண்கள்- கல்லீரல் பாதிப்பால் உடல் சோர்வு அதிகரிக்கலாம். இதனால் கண்களைச் சுற்றி கருவளையம் தோன்றும்.
கண்களைச் சுற்றி வீக்கம்- வளர்சிதை மாற்றக் கோளாறுகள் காரணமாக கண்களைச் சுற்றி நீர் தேங்கி வீக்கம் ஏற்படும். இது கொழுப்பு கல்லீரல் நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
மங்கலான பார்வை- சிலருக்கு மங்கலான பார்வை கொழுப்பு கல்லீரல் பாதிப்புடன் தொடர்புடையதாக இருக்கலாம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |