இந்த அறிகுறிகள் இங்க இருக்கா? சிறுநீரக பிரச்சனையாக இருக்கலாம்
நமது உடலில் சிறுநீரகங்கள் மிகவும் முக்கியமானவை. சிறுநீரகங்கள் இரத்தத்திலிருந்து யூரியா போன்ற கழிவுகளை வடிகட்டும் வேலையை செய்கின்றன.
மேலும் செரிமான அமைப்பிலிருந்து வெளியேறும் கழிவுகளில் உள்ள அதிகப்படியான திரவங்களை வெளியேற்றுகின்றன.
ஆனால் இதய நோய்கள், சர்க்கரை நோய், புற்றுநோய் போல சிறுநீரக பிரச்சனைகளும் பயங்கரமானவை.சிறுநீரக பிரச்சனை உண்டாக்கும் அறிகுறிகளை காண்போம்.
உண்டாகும் அறிகுறிகள்
சிறுநீரின் நிறம் மாறினால் அல்லது சிறுநீர் சாதாரணமாக இல்லாமலிருந்தால், அது சிறுநீரக பிரச்சனையாக இருக்க வாய்ப்புள்ளது.
சிறுநீரகங்கள் சரியாக செயல்படவில்லை என்றால், கழிவுகளை சுத்தம் செய்யும் செயல்முறை பிரச்சினைக்கு உள்ளாகும்.
அதனால், அந்த கழிவுகள் ரத்தத்தில் கலந்து, வாயில் துர்நாற்றம் வீசுகிறது.
சிறுநீரகங்கள் முற்றிலும் சேதமடைந்தால், சுவை மற்றும் பசியின்மை திறன் ஆகியவை வேகமாக குறையும்.
இரத்தத்தில் உள்ள கழிவுகளின் காரணமாக அடிக்கடி குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படும்.
சிறுநீரக செயல்பாடு குறைவது இரத்த சிவப்பணு உற்பத்தியை பாதித்து சோர்வு மற்றும் மூளை தொடர்பான பிரச்சனைகளை உண்டாக்கும்.
சிறுநீரகம் அமைந்துள்ள பின் பகுதியில் வலி அதிகமாக இருக்கும், இது சிறுநீரக செயலிழப்புக்கான பொதுவான அறிகுறியாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |