பிரான்சின் உதவியை நம்பியிருக்கிறோம்: சிரிய ஜனாதிபதி
சிரியாவைக் கட்டியெழுப்ப உதவுவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ள நிலையில், சிரியா பிரான்சின் உதவியை நம்பியிருப்பதாக சிரிய ஜனாதிபதியான அஹ்மத் அல் ஷரா தெரிவித்துள்ளார்.
சிரியா சென்றுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி
பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான் சிரியாவுக்குச் சென்றுள்ள நிலையில், சிரியாவின் பொருளாதாரம் மற்றும் வங்கித் துறையைக் கட்டியெழுப்ப உதவப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

சிரியா தரப்பில், தங்கள் நாட்டுக்கு எதிரான இஸ்ரேல் தாக்குதல்களைத் தடுக்க பிரான்சின் உதவியை நம்பியிருப்பதாக சிரியாவின் ஜனாதிபதியான அஹ்மத் அல் ஷரா தெரிவித்துள்ளார்.
மேக்ரான் சிரிய உள்நாட்டு யுத்தத்துக்குப் பின் முதன்முறையாக சிரியா சென்றுள்ள நிலையில், இரு நாடுகளும் மீண்டும் தங்களுக்கிடையிலான உறவை மீட்டெடுக்கும் வகையில் விரைவில் இரு நாடுகளும் தத்தம் தூதர்களை பரிமாறிக்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளதாக அல் ஷரா தெரிவித்துள்ளார்.

மேலும், நேற்று மேக்ரான் சிரிய தலைநகர் டமாஸ்கஸில் தங்கியிருந்தபோது அங்கு இரண்டு குண்டுகள் வெடித்த பின்பும், தன் பயணத்தை மேக்ரான் தொடர்ந்ததால் அவரது தைரியத்தை மெச்சிக்கொள்வதாகவும் அல் ஷரா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |