கல்யாண் ஜூவல்லர்ஸ் உரிமையாளரின் சொத்து மதிப்பு எவ்வளவுன்னு தெரியுமா? வெளியான தகவல்
கல்யாண் ஜூவல்லர்ஸ் நகைக்கடை உரிமையாளர்கள் டி.எஸ்.கல்யாணராமனின் நிறுவனத்தின் சொத்து மதிப்பும், கார், ஹெலிகாப்டரின் விலை குறித்த தகவல் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
டி.எஸ்.கல்யாணராமன் செர்த்து மதிப்பு
இந்தியாவில் மிகப் பிரபல நகைக்கடைகளிலேயே கல்யாண் ஜூவல்லர்ஸ் நகைக்கடை ஒன்றாக உள்ளது. அதன் உரிமையாளர் கடந்து வந்த பாதையை இந்த பதிவில் பார்க்கலாம் -
12 வயது இருக்கும்போது தன் தந்தையிடம் தொழிலை கற்கத்தொடங்கினார் டி.எஸ்.கல்யாணராமன். அன்றிலிருந்து இன்று வரை தன்னுடைய விடாமுயற்சியால் இந்தியாவின் மிகப்பெரிய ரீடைல் ஜுவல்லரி ஸ்டோரின் உரிமையாளராக வளர்ந்துள்ளார்.
கடந்த 1993ம் ஆண்டு முதல்முறையாக கல்யாண் ஜுவல்லர்ஸ் நகைக்கடை தொடங்கப்பட்டது. தற்போது இந்நிறுவனத்தின் மதிப்பு ரூ.8,407 கோடியாகும். இவர் கல்யாண் ஜூவல்லர்ஸ் மற்றும் கல்யாண் டெவலப்பர்ஸ் - இன் சேர்மன், மேனேஜிங் டைரக்டராக உள்ளார்.
வெளிநாடுகளிலும் கல்யாண் ஜூவல்லர்ஸ் நகைக்கடை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இவருடைய விருப்பமே விலை உயர்ந்த கார்களை வாங்க வேண்டும் என்பதுதானாம்.
தற்போது, ஒரு ரோல்ஸ் ராய்ஸ் பாந்தோம் சீரிஸ் I மற்றும் 2 பாந்தோம் சீரிஸ் II மாடல்கள் உட்பட 3 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கியுள்ளார்.
ஹெலிகாப்டரின் விலை
ரோல்ஸ் ராய்ஸ் பாந்தோம் காரின் விலை மட்டும் சுமார் ரூ.10 கோடியாகும். இந்த ஆடம்பர கார் வலுவான 6.75 லிட்டர் V12 பெட்ரோல் இன்ஜின் மூலம் இயங்குமாம்.
மேலும், இவரிடம் ஒரு பிரைவேட் ஜெட், ஒரு ஹெலிகாப்டரும் இருக்கிறது. இதன் மதிப்பு சுமார் 178 கோடி மதிப்பு கொண்டது. மேலும், கனடாவில் தயாரிக்கப்பட்ட பெல் 4207 என்ற ஹெலிகாப்டரை வாங்கியுள்ளார். இந்த ஹெலிகாப்டரின் விலை ரூ.48 கோடியாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |