டி20 கிரிக்கெட் புதிய தரவரிசை! புதிய உச்சம் தொட்டு இந்திய அணி நட்சத்திர வீரர் சாதனை
டி20 பேட்ஸ்மேனுக்கான புதிய தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
சூர்யகுமார் யாதவ்
இதில் அதிக புள்ளிகளைப் பெற்று இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் புதிய உச்சத்தை தொட்டு நம்பர் 1 இடத்தை தக்க வைத்துள்ளார். 20 ஓவர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் தொடர்சியாக ரன்களை குவித்து வருவதால் சூர்ய குமார் மீதான ரசிகர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.
தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 47 ரன்கள் எடுத்தார். 2ஆவது போட்டியில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுடன் முக்கியமான தருணத்தில் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து அணி வெற்றிபெற காரணமாக இருந்தார்.
AFP
சாதனையை முறியடிப்பாரா?
இந்த நிலையில் ஐசிசி அவருக்கு 908 புள்ளிகளை டி20 பேட்ஸ்மேனுக்கான தரவரிசையில் அளித்துள்ளது. இந்த புள்ளி அவர் எட்டியிருக்கு உச்சபட்சம் என்பதால் வாழ்த்துகளை குவிந்து வருகிறது.
டி20 பேட்ஸ்மேனுக்கான தர வரிசையில் தென்னாப்பிரிக்காவின் டேவிட் மாலன் அதிகபட்சமாக 915 புள்ளிகளைப் பெற்றிருந்தார். விரைவில் இந்த சாதனையை சூர்யகுமார் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் (836 புள்ளிகள்) மற்றும் மூன்றாவது இடத்தில் நியூசிலாந்தின் டிவோன் கோன்வே (788) ஆகியோரும் உள்ளனர்.