டி20 கிரிக்கெட் உலகக்கோப்பையை இந்த அணி தான் தட்டி தூக்கும்! பிரபல நட்சத்திர வீரர் கணிப்பு
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை வெல்லும் அணி குறித்து பாகிஸ்தான் வீரர் இமாத் வாசிம் கணித்துள்ளார்.
மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக் கோப்பை தொடர், வருகிற அக்டோபர் 17ஆம் திகதி துவங்கி, நவம்பர் 14ஆம் திகதி நிறைவடையும், போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் (தகுதி சுற்று மட்டும்) நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் எந்த அணி கோப்பை வெல்லும் என்பது குறித்து பாகிஸ்தான் அணி வீரர் இமாத் வாசிம் பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், பாகிஸ்தான் அணி, பல வருடங்களாக ஐக்கிய அரபு அமீரகத்தைதான் ஹோம் கிரௌண்டாக பயன்படுத்தி வருகிறது.
இதனால், அங்கு இருக்கும் காலநிலை, மைதானத்தின் தன்மை அறிந்து எங்களால் சிறப்பாக விளையாட முடியும். இதனால், இந்த முறை டி20 உலகக் கோப்பையை கைப்பற்ற எங்களுக்குத்தான் வாய்ப்பு அதிகம்.
100 சதவீத ஆற்றலையும் பயன்படுத்தி கோப்பை வெல்ல கடுமையாகப் போராடுவோம் என கூறியுள்ளார்.