டி20 உலகக்கோப்பை அரையிறுதி! நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இங்கிலாந்து
உலகக்கோப்பை டி20 தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் இங்கிலாந்து அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று உலகக்கோப்பை டி20 தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்ததால், இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடி வருகிறது. அதன் படி சற்று முன் வரை இங்கிலாந்து அணி 14.5 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 109 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.
இங்கிலாந்து அணியில் துவக்க வீரரான ஜோஸ் பட்லர் 24 பந்தில் 29 ஓட்டங்களும், ஜானி பேர்ஸ்டோவ் 17 பந்தில் 13 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகினர்.
இதைத் தொடர்ந்து டேவிட் மலான் மற்றும் மொயின் அலி விளையாடி வருகின்றனர்.
நியூசிலாந்து அணியில் ஆடம் மைல் மற்றும் இஷ் சோதி தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.