அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக்கொண்ட இந்தியா., ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இமாலய வெற்றி!

India Cricket Afghanistan T20 World Cup
By Ragavan Nov 03, 2021 07:45 PM GMT
Report

டி20 உலகக் கோப்பை தொடரில் இன்றைய ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய அணி 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

டி20 உலக கோப்பை 7-வது சீசன் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இந்நிலையில் புதன்கிழமை அபுதாபியில் நடந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

அரையிறுதி வாய்ப்பை தக்க வைப்பதற்காக இனி எல்லா ஆட்டங்களிலும் வென்றே தீர வேண்டிய கட்டாயத்துடன் இந்திய அணி இருக்கிறது.

இந்த நிலையில், இந்திய அணியில் இஷான் கிஷான், வருண் சக்ரவர்த்தி நீக்கப்பட்டு சூர்யகுமார் யாதவ், அஷ்வின் தேர்வாகினர். ஆட்டத்தின் தொடக்கத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபி, பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக்கொண்ட இந்தியா., ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இமாலய வெற்றி! | T20 World Cup 2021 India Won Against Afghanistan

இதனால், இந்திய அணி முதலில் துடுப்பாட்டத்தில் களமிறங்க, இன்னிங்ஸை தொடங்கிய கே.எல்.ராகுல் - ரோஹித் சா்மா இணை வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் பவுண்டரி சிக்ஸா்களாக விளாசியாது. இதனால் 5வது ஓவரிலேயே 50 ஓட்டங்களை எட்டியது இந்தியா.

இதனிடையே ரோஹித் 37 பந்துகளிலும், ராகுல் 35 பந்துகளிலும் அரைசதம் கடந்தனா். முதல் விக்கெட்டுக்கு 140 ஓட்டங்கள் சோ்த்த இந்த கூட்டணியை கரீம் ஜனத் 15-வது ஓவரில் பிரித்தாா்.

8 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 74 ஓட்டங்கள் எடுத்திருந்த ரோஹித், அவரது பந்துவீச்சில் விளாசிய பந்து முகமது நபி கைகளில் பிடிக்கப்பட்டது.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பண்ட, மறுபுறம் ராகுலும் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 69 ஓட்டங்கள் சோ்த்த நிலையில் குல்பதின் நயிப் வீசிய 17-வது ஓவரில் வெளியேறினார்.

அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக்கொண்ட இந்தியா., ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இமாலய வெற்றி! | T20 World Cup 2021 India Won Against Afghanistan

பின்னா் பாண்டியா களம் புகுந்தாா். 20 ஓவா் முடிவில் பந்த் 1 பவுண்டரி, 3 சிக்ஸா்களுடன் 27, பாண்டியா 4 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 35 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

இறுதியில் இந்திய அணி, 20 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 210 ஓட்டங்கள் விளாசியது.

இதன்மூலம் இந்த சீசனில் ஒரு இன்னிங்சில் அதிக ஓட்டங்கள் குவித்த அணியானது இந்தியா.

இதற்கு முன், சார்ஜாவில் நடந்த ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 190 ஓட்டங்கள் எடுத்தது அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து கடின இலக்கை விரட்ட ஆப்கானிஸ்தான் அணிகளமிறங்கியது. தொடக்கத்திலேயே முகமது ஷஜாத் (0), ஹஜ்ரதுல்லா ஜஜாய் (13) ஜோடி ஏமாற்றியது.

ஷமி வீசிய 5வது ஓவரில் தொடர்ச்சியாக 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த ரஹ்மானுல்லா குர்பாஸ் (19) நிலைக்கவில்லை. அஷ்வினின் சுழற்பந்தில் குல்பதின் (18), நஜிபுல்லா ஜத்ரான் (11) சிக்கி வெளியேறினார்.

அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக்கொண்ட இந்தியா., ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இமாலய வெற்றி! | T20 World Cup 2021 India Won Against Afghanistan

பின் இணைந்த கேப்டன் முகமது நபி, கரீம் ஜனத் கூட்டணி பொறுப்பாக விளையாடியது. 6வது விக்கெட்டுக்கு 57 ஓட்டங்கள் சேர்த்த போது ஷமியின் வேகப்பந்தில் நபி 35 ஓட்டங்களுடன் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ரஷித் கான் 'டக்-அவுட்' ஆனார்.

ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 144 ஓட்டங்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. ஜனத் (42), அஷ்ரப் (2) அவுட்டாகாமல் இருந்தனர்.

இந்தியா சார்பில் ஷமி 3 விக்கெட் வீழ்த்தினார். அஸ்வின் 2 விக்கட்டை வீழ்த்தினார்.

இமாலய வெற்றியை பதிவு செய்து அரையிறுதிக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது இந்திய அணி.

அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக்கொண்ட இந்தியா., ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இமாலய வெற்றி! | T20 World Cup 2021 India Won Against Afghanistan

4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US