சாதனை படைத்த டிக்கெட் விற்பனை! டி 20 உலகக்கோப்பை வெல்லப்போவது யார்?
2022 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட்கள் விற்பனை, தொடங்கிய 5 நிமிடங்களுக்குள் விற்றுத் தீர்ந்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் 2020 ஆண்டு நடைபெறவிருந்த உலக கோப்பை டி 20 தொடர்கள் கொரோனா பரவல் அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இப்போட்டிகள் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த போட்டிகள் Melbourne, Sydney, Brisbane, Adelaide, Geelong, Hobart மற்றும் Perth என ஏழு மைதானங்களில் நடைபெறவுள்ளது.
இந்த உலகக்கோப்பை தொடருக்கான டிக்கெட் முன் பதிவில் இதுவரை 2,00,000 டிக்கெட்கள் விற்பனையாகியுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட்கள் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலே விற்றுத் தீர்ந்துள்ளது.
இந்த போட்டி அவுஸ்திரேலியாவில் உள்ள melbourne மைதானத்தில் அக்டோபர் 23ம் திகதி நடைபெறவுள்ளது.
இது குறித்து ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2022யின் உள்ளூர் ஏற்பாட்டுக் குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி மிச்செல் என்ரைட் பேசுகையில் "ரசிகர்களின் ஆதரவு மிக அருமையாக இருப்பதாகவும், 2020 ஆண்டு நடைபெறவிருந்த போட்டியை காண டிக்கெட் முன்பதிவு செய்த ரசிகர்களுக்கு இந்த ஆண்டு முன்பதிவில் முன்னுரிமை மற்றும் சலுகைகள் வழங்கியதில் பெருமிதம் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்".
இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் உலகக்கோப்பை தொடரில் 45 போட்டிகள் மொத்தம் நடைபெற இருப்பதாகவும், அதில் 8,00,000 லட்சம் வரை பார்வையாளர்கள் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.