கடைக்குட்டி சிங்கத்தின் மிரட்டலான கம்பேக்: தொடர் நாயகன் சாம் கர்ரன் சொன்ன அந்த வார்த்தை!
கடந்த 2021ம் ஆண்டு இங்கிலாந்து அணியில் இடம் பெறாமல் கமெண்டரி செய்த சாம் கர்ரன், தற்போது 2022ம் ஆண்டு இங்கிலாந்து அணி கோப்பையை வெல்வதற்கான முக்கிய திறவு கோளாய் மாறியுள்ளார்.
பந்துவீச்சில் மிரட்டிய சாம் குர்ரன்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் பாகிஸ்தான் வீரர்களை ஓட்டங்கள் குவிக்க விடாமல் திணறடித்தனர்.
அதிலும் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் சாம் குர்ரன் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினார்.
நான்கு ஓவர்கள் பந்து வீசிய சாம் குர்ரன் 12 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
மிகவும் ஆபத்தான வீரராக கருதப்பட்ட பாபர் அசாம்-ரிஸ்வான் ஜோடியை உடைத்து பாகிஸ்தான் அணியின் அடித்தளத்தை உடைத்து எறிந்தார்.
ரசிகர்களை வார்த்தையால் அசத்திய சாம் குர்ரன்
உலக கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை இங்கிலாந்து பந்து வீச்சாளர் சாம் கர்ரன் பெற்றார்.
இதை தொடர்ந்து பேசிய சாம் கர்ரன், உண்மையில் இந்த விருது எனக்கு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை, மாறாக பென் ஸ்டோக்ஸ்-க்கு தான் இந்த விருது சென்றிருக்க வேண்டும்.
இங்கிலாந்து அணிக்காக இது போன்ற பல தருணங்களில் அவர் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார், அவர் தான் இந்த விருதின் ரியல் ஓனர் என்று சாம் குர்ரன் தெரிவித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மிரட்டலான கம்பேக்
முன்னதாக 2021ம் ஆண்டு டி20 உலக கோப்பை போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இருந்து சாம் குர்ரன் விலக்கப்பட்டு இருந்தார், அத்துடன் அந்த தொடரில் கமென்ட்ரியாளராக செயல்பட்டார்.
ஆனால் இந்த உலக கோப்பை தொடரில், மொத்தம் 13 விக்கெட்டுகளை சாம் குர்ரன் எடுத்ததன் மூலம் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை பெற்றுள்ளார்.
முதல் வீரர்
இதுவரை நடந்த டி20 உலக கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருதை ஷாகித் அப்ரிதி, தில்ஷன்,கெவின் பீட்டர்சன், ஷேன் வாட்சன், மற்றும் விராட் கோலி ஆகிய துடுப்பாட்ட வீரர்கள் மட்டுமே பெற்று வந்த நிலையில், முதல் முறையாக பந்து வீச்சாளர்களில் ஒருவராக சாம் குர்ரன் தொடர் நாயகன் விருதை பெற்றுள்ளார்.