T20 உலக கோப்பை 2024: இந்தியாவுக்கு சாதகமாக அமைகிறதா வானிலை?
டி20 உலகக் கோப்பையின் அரையிறுதி சுற்றுகள் நாளை தொடங்கவுள்ள நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அரையிறுதி ஆட்டம் மழையால் பாதிக்கப்படலாம் என்ற அச்சுறுத்தல் எழுந்துள்ளது.
கவலை அளிக்கும் வானிலை
தென்னாப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ள டி20 உலகக் கோப்பையின் அரையிறுதி போட்டி நாளை காலை 6 மணிக்கு தொடங்கவுள்ளது.
போட்டி நடைபெறும் கயானாவில் இன்று 90% மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது, நாளை காலை அது 60% வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கனமழை பெய்யும் பட்சத்தில், போட்டி திட்டமிட்டபடி தொடங்கப்படாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
இதனை தொடர்ந்து இந்தியா-இங்கிலாந்து மோதும் 2வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி போட்டி நாளை இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ளது.
பிரித்தானியாவில் பள்ளி சிறுமிகள் மரணம்: குற்றச்சாட்டு இன்றி தப்பித்த ஓட்டுநர்: குடும்பத்தினர் கடும் விமர்சனம்
இந்தியாவுக்கு சாதகமான விதி
இந்தியா - இங்கிலாந்து இடையிலான அரையிறுதி போட்டிக்கு ரிசர்வ் நாள் இல்லை என்றாலும், ஐசிசி 250 நிமிடங்கள் வரை போட்டிக்கான கூடுதல் நேரத்தை ஒதுக்கியுள்ளது.
இருப்பினும் மழை குறுக்கீட்டால் போட்டி தடைப்பட்டு முடிவுகள் அடைய முடியாத நிலை ஏற்பட்டால், சூப்பர் 8 சுற்றில் முதலிடம் பிடித்ததன் மூலம் இந்தியா நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
இருப்பினும், நேற்று முதல் வானிலை மேம்பட்டு வருவதாகவும், நாளை போட்டிக்கு சாதகமான வானிலை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |