இந்தியா-இங்கிலாந்து போட்டியில் மழை குறுக்கீடு: தடுமாறும் இந்திய அணி பேட்ஸ்மேன்கள்!
T20 உலக கோப்பை தொடரில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 2வது அரையிறுதி போட்டி சற்றுமுன் தொடங்கியுள்ளது.
மழை குறுக்கீடு
T20 உலகக் கோப்பையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது அரையிறுதி போட்டி மழையின் காரணமாக தாமதமாக தொடங்கியுள்ளது.
பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி மழை தூறல் மற்றும் ஈரப்பதம் காரணமாக தாமதமடைந்தது.
இதன் காரணமாக போட்டியின் நாணய சுழற்சியானது 8 மணிக்கு நடுவர்களின் ஆய்வுக்கு பிறகு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து
இதையடுத்து 8:30 மணிக்கு மேலாக நடந்த நாணய சுழற்சியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
மைதானம் மற்றும் வானிலை ஆகியவை இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நாணய சுழற்சியில் தோல்வியடைந்தது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
The Hitman has walked out with the clear intent! 🎯#TeamIndia have got the start they needed! How much will #RohitSharma score tonight?#SemiFinal2 👉 #INDvsENG | LIVE NOW | #T20WorldCupOnStar pic.twitter.com/VRpUxZ4m4d
— Star Sports (@StarSportsIndia) June 27, 2024
இதையடுத்து முதல் பேட்டிங்கில் களமிறங்கி விளையாடி வரும் இந்திய அணி தற்போது 8 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 65 ஓட்டங்களை குவித்துள்ளது.
இந்நிலையில் ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், மழை மீண்டும் குறுக்கிட்டுள்ளது, இதனால் போட்டி மீண்டும் தடைப்பட்டுள்ளது.
இந்திய அணி சார்ப்பில் களத்தில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சூரிய குமார் யாதவ் களத்தில் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |