T20 World Cup Finals: பயிற்சியை ரத்து செய்த இந்திய அணி., காரணம் என்ன..?
டி20 உலகக் கோப்பையின் ஒன்பதாவது சீசனில் தோல்வியின்றி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.
பார்படாஸில் உள்ள பிரிட்ஜ்டவுன் மைதானத்தில் நாளை (சனிக்கிழமை) நடக்கவிருக்கும் இறுதிப்போட்டியில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சவாலை எதிர்கொள்ளவுள்ளது.
ஆனால், இறுதிப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணி பயிற்சி அமர்வை ரத்து செய்தது.
கயானாவில் மழை குறுக்கீடுகளுக்கு மத்தியில் இங்கிலாந்தை வீட்டுக்கு அனுப்பிய இந்திய அணி, பார்படாஸ் சென்றது தான் காரணம்.
பயண மாற்றம் காரணமாக நிர்வாகம் பயிற்சி அமர்வை ரத்து செய்தது. அதன் மூலம் இந்திய கிரிக்கெட் வீரர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) ஓய்வெடுத்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India vs South Africa finals, India Cancel Practice Session, T20 World Cup 2024 Final, Indian Cricket Team