T20 உலக கோப்பை தட்டி தூக்கிய இந்திய அணி! தென்னாப்பிரிக்காவை மிரட்டிய இந்திய பந்துவீச்சாளர்கள்
2024 T20 உலக கோப்பையின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது.
மோசமான தொடக்கம்
இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையிலான 2024 T20 உலக கோப்பையின் இறுதிப் போட்டி கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஆனால் இந்திய அணிக்கு அதிர்ச்சி தரும் விதமாக தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் ரோகித் சர்மா 9 ஓட்டங்களில் மகாராஜா பந்தில் அவுட்டானார்.
This one's for you Rohirat, this one's for you India 🇮🇳💙 pic.twitter.com/dSmT9EinFL
— Lucknow Super Giants (@LucknowIPL) June 29, 2024
அவரை தொடர்ந்து வந்த ரிஷப் பண்ட்(0) மற்றும் சூர்யகுமார் யாதவ்(3) என சொற்ப ஓட்டங்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினர்.
பின்னர் களத்தில் ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் அக்சர் படேல் இந்திய அணியை தடுமாற்றத்தில் இருந்து மீட்டெடுத்தனர்.
அக்சர் படேல் 31 பந்துகளில் 47 ஓட்டங்கள் குவித்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
King Kohli reigns supreme 👑
— ICC (@ICC) June 29, 2024
Virat Kohli is awarded the @Aramco POTM after his 76 off 59, played a pivotal role in India lifting the #T20WorldCup trophy 🏆#SAvIND pic.twitter.com/Lgiat14xm6
விராட் கோலி அதிரடி
ஆரம்பம் முதலே பொறுப்புடன் விளையாடிய விராட் கோலி மொத்தம் 76 ஓட்டங்கள் குவித்தார்.
58 பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் விளாசி அவுட்டானார்.
அவரை தொடர்ந்து சிவம் தூபே 27 ஓட்டங்களும், பாண்டியா 5 ஓட்டங்களும் குவித்தனர்.
𝐁𝐎𝐖𝐋𝐄𝐃! Jansen departs! 👊🏻#JaspritBumrah cleans up #MarcoJansen & #TeamIndia are making a incredible comeback in this game! 🔥#T20WorldCupFinal | #INDvsSA | LIVE NOW pic.twitter.com/VfD3aoFXBY
— Star Sports (@StarSportsIndia) June 29, 2024
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 176 ஓட்டங்கள் குவித்துள்ளது.
உலக கோப்பை தட்டி தூக்கிய இந்தியா
177 ஓட்டங்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் ரீசா ஹென்ட்ரிக்ஸ் மற்றும் டி-காக் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
ரீசா ஹென்ட்ரிக்ஸ் 4 ஓட்டங்களும், கேப்டன் ஐடன் மார்க்ராம் 4 ஓட்டங்களும் வெளியேறி தென்னாப்பிரிக்க அணி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினர்.
ஆனால் பின்னர் ஜோடி சேர்ந்த டி காக் மற்றும் ஹென்ரிச் கிளாசென் அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
𝐖𝐎𝐑𝐋𝐃 𝐂𝐇𝐀𝐌𝐏𝐈𝐎𝐍𝐒!!! 🏆🇮🇳#T20WorldCup #TeamIndia pic.twitter.com/QcU7XK7JAo
— MANOJ TIWARY (@tiwarymanoj) June 29, 2024
டி காக் 39 ஓட்டங்களும், ஹென்ரிச் கிளாசென் 52 ஓட்டங்களும் குவித்து துரதிஷ்டவசமாக விக்கெட்டை பறிகொடுத்தனர்.
ஒரு கட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி பக்கம் வெற்றி சரிய தொடங்கவே, இந்திய அணி ரசிகர்களுக்கு பதட்டம் அதிகரித்தது.
கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 20 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் 19 வது ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் வெறும் 4 ஓட்டங்கள் விட்டு கொடுத்து போட்டியை இந்திய அணியின் பக்கம் திருப்பினார்.
The wait of 17 years is finally over! India wins the T20 World Cup! What a moment for our nation! Proud of the boys for their incredible performances on the field today. Every player gave their all, and it paid off in the best way possible. What a historic victory!… pic.twitter.com/cVwz964Q2w
— Suresh Raina🇮🇳 (@ImRaina) June 29, 2024
தென்னாப்பிரிக்க அணிக்கு கடைசி ஓவரில் 16 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், பாண்டியா கடைசி ஓவரை வீசினார்.
பாண்டியா வீசிய 20 வது ஓவரின் முதல் பந்தை டேவிட் மில்லர் சிக்சர் எல்லைக்கு தூக்கி அடிக்கவே, அதை சூர்யகுமார் யாதவ் மிக திறமையாக கேட்ச் பிடித்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 8 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.
இதன் மூலம் இந்திய அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
2007ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி T20 உலக கோப்பை தட்டித் தூக்கி சாதனை படைத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |