டி20 உலகக்கிண்ணம் 2024: சாதனை படைத்த வீரர்களின் பட்டியல்..முதலிடத்தில் ஆப்கான் வீரர்கள்
அமெரிக்க மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடந்த டி20 உலகக்கிண்ணத் தொடரில் சாதனை படைத்த வீரர்கள் குறித்து இங்கே காண்போம்.
ரஹ்மானுல்லா குர்பாஸ்
இந்திய கிரிக்கெட் அணி இரண்டாவது முறையாக டி20 உலகக்கிண்ணத்தை வென்று வரலாறு படைத்தது.
இந்தத் தொடரில் சாதனைப் படைத்த வீரர்களில் ஆப்கானிஸ்தான் அணியின் இரு வீரர்கள் முதலிடம் பிடித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அதாவது அதிக ஓட்டங்கள் குவித்தவர்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் ஆப்கான் வீரர்களே முதலிடத்தில் உள்ளனர்.
281 ஓட்டங்கள் குவித்த ரஹ்மானுல்லா குர்பாஸ் (Rahmanullah Gurbaz) அதிக ஓட்டங்கள் குவித்தவர்களில் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ரோஹித் ஷர்மா (257), டிராவிஸ் ஹெட் (255), குவிண்டன் டி காக் (243) மற்றும் இப்ராஹிம் ஜட்ரான் ஆகியோர் உள்ளனர்.
அதேபோல் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஆப்கானின் பஸல்ஹக் ஃபரூக்கி 17 விக்கெட்டுக்கள் வீழ்த்தி முதலிடம் பிடித்துள்ளார்.
அவருக்கு அடுத்த இடங்களில் அர்ஷ்தீப் சிங் (17), ஜஸ்பிரீத் பும்ரா (15), அன்ரிச் நோர்ட்ஜெ (15), ராஷித் கான் (14), ரிஷாத் ஹொசைன் (14) ஆகியோர் உள்ளனர்.
தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் பட்டியலில் நிக்கோலஸ் பூரன் (மேற்கிந்திய தீவுகள்) 98 ஓட்டங்கள் குவித்ததன் மூலம் முதலிடம் பிடித்துள்ளார்.
அதிகபட்ச ஸ்கோர் எடுத்த துடுப்பாட்ட வீரர்கள்
- நிக்கோலஸ் பூரன் (மேற்கிந்திய தீவுகள்) - 98
- ஆரோன் ஜோன்ஸ் (அமெரிக்கா) - 94*
- ரோஹித் ஷர்மா (இந்தியா) - 92
- பிலிப் சால்ட் (இங்கிலாந்து) - 87*
- ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து) - 83*
அதிக கேட்சுகள் பிடித்தவர்கள்
- எய்டன் மார்க்ரம் (தென் ஆப்பிரிக்கா) - 8
- கிளென் மேக்ஸ்வெல் (அவுஸ்திரேலியா) - 7
- ஹாரி புரூக் (இங்கிலாந்து) - 7
- ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (தென் ஆப்பிரிக்கா) - 7
- ஷாகிப் அல் ஹசன் (வங்கதேசம்) - 6
ஆப்கானிஸ்தானின் ஃபரூக்கி (5/9) மற்றும் மேற்கிந்திய தீவுகளின் அக்கீல் ஹொசைன் (5/11) ஆகிய இருவரும் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |