உலகக்கிண்ண டி20 போட்டி: இலங்கை-தென்னாபிரிக்க அணிகள் பலப்பரீட்சை
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான உலகக்கிண்ண டி20 போட்டியானது தற்போது ஆரம்பமாகியுள்ளது
இதன்படி நாணயசுழட்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
டி குழுவில் இடம்பெறும் இந்த போட்டியானது நியூ யோர்க், நசவ் செயற்கை விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது.
அதிரடி துடுப்பாட்ட வீரர்களை தன்னகத்தே கொண்டுள்ள தென்னாபிரிக்கா அணி இலங்கையின் சகலதுறை வீரர்களின் துல்லியமான ஆட்டத்தை எவ்வாறு எதிர்கொள்ளும் என்பது இந்த போட்டியின் சுவாரஷ்யத்தை அதிகரித்துள்ளது.
Wanindu Hasaranga wins the toss and Sri Lanka will bat first against South Africa! Let's go, Lankan Lions! Time to set a big total! ?? #T20WorldCup #LankanLions #SLvSA pic.twitter.com/rMh8gjNB7Z
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) June 3, 2024
தென் ஆபிரிக்காவில் 2007ஆம் ஆண்டு ஆரம்பமான உலக கிண்ண தொடர்முதல் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி உலகக்கிண்ண தொடர்வை இரு அணிகளும் தகுதிபெற்றுள்ளன.
இதில் இலங்கை அணி 2014 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் கோப்பையை சுவீகரித்ததோடு 2 முறைகள் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளது.
எனினும் தென்னாபிரிக்க அணி அனைத்து தொடர்களிலும் இறுதிச்சுற்றுக்கு கூட முன்னேறாமல் வெளியேறியுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையில் இதுவரை இடம்பெற்றுள்ள 17 டி 20 போட்டிகளில் தென்னாபிரிக்க 11 போட்டிகளிலும் இலங்கை 5 போட்டிகளிலும் வெற்றியை பதிவு செய்துள்ளதோடு ஒரு போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது.
இன்றைய போட்டியில் பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, ஏஞ்சலோ மெத்யூஸ், வனிந்து ஹசரங்க, தசுன் ஷானக்க, மகேஷ் தீக்சன துஷ்மன்த சமீர, மதீஷ பத்திரண ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதே போல் தென்னாபிரிக்க அணி சார்பில் குவின்டன் டி கொக், ரீஸா ஹென்றிக்ஸ், ஏய்டன் மார்க்ராம் (தலைவர்), ஹென்ரிச் க்ளாசன், டேவிட் மில்லர், ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ், மார்க்கோ ஜென்சன், கேஷவ் மகாராஜ், கெகிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே ஒட்நீல் பார்ட்மன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |