டி20 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெறாத வீரர்கள்
ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி நேற்று (ஏப்ரல் 30) அறிவிக்கப்பட்டுள்ளது.
கேப்டனாக ரோஹித் ஷர்மாவும், துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் டி20 உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட சில கிரிக்கெட் வீரர்கள் ஏமாற்றத்தை எதிர்கொண்டனர்.
2024 ICC T20 உலகக் கோப்பை போட்டி ஜூன் 01 முதல் ஜூன் 29 வரை நடைபெறும், மேலும் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் கூட்டாக இப்போட்டியை நடத்துகின்றன.
ஐசிசி டி20 உலகக் கோப்பையை இம்முறை வெல்ல ரோஹித் ஷர்மா அணி தயாராக உள்ளது. அஜித் அகர்கர் தலைமையிலான BCCI தேர்வுக் குழு கவனமாக பரிசீலித்து அணியை தேர்வு செய்துள்ளது.
ஆனால் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட சில வீரர்கள் தற்போது டி20 உலக கோப்பை அணியில் இடம் பெறவில்லை. அவர்கள் யார் யார் என்று பார்ப்போம்.
1. கேஎல் ராகுல்:
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து இந்திய மூத்த வீரர் கேஎல் ராகுல் நீக்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களாக ரிஷப் பந்த் மற்றும் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டுள்ளனர்.
2. ஷ்ரேயாஸ் ஐயர்
இந்திய அணியின் நம்பகமான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஸ்ரேயாஸ் ஐயர், ஒருநாள் கிரிக்கெட்டில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆனால் டி20 உலக கோப்பை போட்டிக்கு ஷ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்படவில்லை.
3. திலக் வர்மா
திறமையான இளம் இடது கை பேட்ஸ்மேனான திலக் வர்மா, இந்தியாவுக்காக டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்டார். அப்படி இருந்தும், திலக்கை தேர்வு செய்ய பிசிசிஐ தேர்வுக் குழு முன்வரவில்லை.
4. தினேஷ் கார்த்திக்
ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக சிறப்பான மேட்ச் ஃபினிஷிங் மூலம் பிரகாசித்த மூத்த விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக், உலக கோப்பை போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்வுக் குழு டிகேவுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
5. ஷுப்மான் கில்
டீம் இந்தியாவின் திறமையான தொடக்க பேட்ஸ்மேன் ஷுப்மான் கில் 15 பேர் கொண்ட அணியில் இடம் பெறத் தவறிவிட்டார். ஆனால் ரிசர்வ் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வீரர்கள் காயம் அடைந்தாலோ அல்லது தவிர்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டாலோ கில் இந்திய அணியில் சேர வாய்ப்புள்ளது.
6. ருதுராஜ் கெய்க்வாட்
சிஎஸ்கே அணியின் இளம் கேப்டனான கெய்க்வாட், நடப்பு ஐபிஎல் போட்டியில் அதிக ஓட்டங்களைக் குவித்தவர்களில் 2-வது இடத்தில் உள்ளதால், உலகக் கோப்பை அணிக்கு தேர்வு செய்யப்படுவார் என்ற நம்பிக்கையில் இருந்தார். கெய்க்வாட்டுக்கும் தேர்வுக் குழு அதிர்ச்சி அளித்துள்ளது.
7. ரிங்கு சிங்
இந்தியா மற்றும் ஐபிஎல் போட்டிகளில் கடந்த ஒரு வருடத்தில் KKR-க்காக ஒரு அற்புதமான மேட்ச் ஃபினிஷராக அங்கீகரிக்கப்பட்ட ரிங்குவும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளார். ரிங்கு தற்போது ரிசர்வ் வீரராக உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Rinku Singh, Ruturaj Gaikwad, Shubman Gill, Dinesh Karthik, Tilak Varma, Shreyas Iyer, KL Rahul, India announce squad for Men's T20 World Cup 2024, ICC Men's T20 World Cup 2024