கடினமான ஆடுகளம்., 77க்கு மொத்தமாக சரிந்த இலங்கை., தென் ஆப்பிரிக்கா முதல் வெற்றி
டி20 உலகக் கோப்பையை தென் ஆப்பிரிக்கா வெற்றியுடன் தொடங்கியது. அந்த அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.
இலங்கை கேப்டன் வனிந்து ஹசரங்க டாஸ் வென்று கடினமான ஆடுகளத்தில் துடுப்பாட செய்ய முடிவு செய்தார்.
ஆனால், இலங்கை அணி 77 ஓட்டங்களுக்கு மொத்தமாக சரிந்தது (All-Out).
அதையடுத்து துடுப்பாடிய தென்னாப்பிரிக்காவும் 16.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பில் 80 ஓட்டங்கள் எடுத்து வெற்றிபெற்றது.
20 ஓட்டங்களுக்கு மேல் அடிக்க முடியாத கடினமான ஆடுகளம்
முதல்முறையாக நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த இந்த சர்வதேச போட்டியில், எந்த பேட்ஸ்மேனும் 20 ஓட்டங்களுக்கு மேல் எடுக்க முடியவில்லை. இதன்மூலம், இந்த ஆடுகளத்தின் சிரமத்தை தெரிந்து கொள்ளலாம்.
போட்டியில் 14 விக்கெட்டுகள் வீழ்ந்தன. இதில் வேகப்பந்து வீச்சாளர்கள் 9 விக்கெட்டுகளையும், சுழற்பந்து வீச்சாளர்கள் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்திய அணி ஜூன் 5-ஆம் திகதி அயர்லாந்தையும், ஜூன் 9-ஆம் திகதி பாகிஸ்தானையும் அதே நாசாவில் உள்ள மைதானத்தில் எதிர்கொள்கிறது.
இந்தியா தனது ஒரே பயிற்சி ஆட்டத்தில் வங்கதேசத்தை இந்த மைதானத்தில் விளையாடி வெற்றி பெற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |