டி20 உலகக் கோப்பை: 10 வது ஓவரிலேயே வெற்றி! ஓமன் அணியை பந்தாடிய அவுஸ்திரேலியா
உலகக் கோப்பை டி20 போட்டியில் ஓமன் அணியை வீழ்த்தி 9 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா அபார வெற்றி பெற்றுள்ளது.
அவுஸ்திரேலியா - ஓமன் மோதல்
டி20 உலகக் கோப்பை தொடரின் 40 வது லீக் ஆட்டத்தில் அவுஸ்திரேலியா - ஓமன் அணிகள் மோதின.
இலங்கையின் பல்லேகலே மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனால் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய ஓமன் அணி 16.4 ஓவர்கள் முடிவில் 104 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது.

ஓமன் அணியில் வாசிம் அலி 32 ஓட்டங்கள் குவித்தார், அவுஸ்திரேலிய அணியில் ஆடம் ஜாம்பா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அவுஸ்திரேலிய வெற்றி
105 ஓட்டங்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி வெறும் 9.4 ஓவர்கள் முடிவிலேயே 108 ஓட்டங்கள் குவித்து அபார வெற்றி பெற்றது.
அவுஸ்திரேலிய அணியில் மிட்செல் மார்ஷ் 33 பந்துகளில் 64 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.
இறுதியில் அவுஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஓமன் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |