5 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்த அவுஸ்திரேலியா: தொடரை விட்டு வெளியேறியது நமீபியா.
T20 உலகக் கிண்ணத்தில் நமீபியா அணியை துவம்சம் செய்து சூப்பர் 8 சுற்றுக்கான இடத்தை அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணி உறுதி செய்துள்ளது.
தடுமாறிய நமீபியா
T20 உலகக் கிண்ணத்தில் அவுஸ்திரேலியா மற்றும் நமீபியா இடையே நடைபெற்ற போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றியைப் பெற்று, சூப்பர் 8 சுற்றில் தங்கள் இடத்தை உறுதி செய்து கொண்டுள்ளது.
ஆண்டிகாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், அவுஸ்திரேலிய அணி ஒரு தலைப்பட்சமான ஆதிக்கத்தை செலுத்தியது.
ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள், ஆடம் ஜம்பாவின் அபாரமாக பந்து வீசி 12 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனால் நமீபியாவை வெறும் 17 ஓவர்களில் 72 ஓட்டங்களுக்குள் அவுஸ்திரேலிய அணி கட்டுப்படுத்தினர்.
வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா
எளிதான இலக்கை துரத்தி பிடித்த அவுஸ்திரேலிய அணி எந்த நேரத்தையும் வீணடிக்கவில்லை.
வெறும் 5.4 ஓவர்களில் 73 ஓட்டங்களை குவித்து வெற்றி இலக்கை அடைந்தனர்.
ட்ரேவிஸ் ஹெட் 34 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்தார், மிட்செல் மார்ஷ் வெற்றி ஓட்டங்களை அடித்து ஆட்டமிழக்காமல் 18 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.
இந்த சிறப்பான வெற்றிக்கு பிறகு அவுஸ்திரேலிய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
அதே சமயம், ஓமானைத் தொடர்ந்து நமீபியா அணியும் இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |