தொடர்ந்து 4-வது வெற்றி! இங்கிலாந்துடன் போராடி தோற்ற இலங்கை
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று சார்ஜாவில் நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதின.
பெற்றி பெற்றே தீரவேண்டும் என்ற நிலையில், டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனால் முதலில் துடுப்பாட்ட காலத்தில் இறங்கிய இங்கிலாந்து அணி, ஜாஸ் பட்லரின் அதிரடி சதத்தால், 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 163 ஓட்டங்களை குவித்தது.
ஜாஸ் பட்லர் 67 பந்தில் 101 ஓட்டங்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜாஸ் பட்லருக்கு டி20 கிரிக்கெட்டில் இதுவே முதல் சதமாகும். அதேபோல் இந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஜாஸ் பட்லரின் இந்த சதமே முதல் சதம்.
ஆட்டத்தில் பட்லருக்கு அடுத்தபடிய கேப்டன் மார்கன் 40 ஓட்டங்கள் எடுத்தார்.
இலங்கை அணி சார்பில் ஹசரங்கா 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து 164 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. அந்த அணியில் யாரும் நிலைத்து நிற்கவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.
அதிகபட்சமாக ஹசரங்கா 34 ஓட்டங்கள் எடுத்தார். ராஜபக்ச, ஷனகா ஆகியோர் தலா 26 ஓட்டங்கள் எடுத்தனர். இறுதியில், இலங்கை அணி 137 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கட்டுகளும் விழுந்து, கிட்டத்தட்ட போராடி தோற்றது.
இதன்மூலம் இங்கிலாந்து அணி 4-வது வெற்றியைப் பதிவு செய்தது. அதாவது இத்தொடரில் இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியதை உறுதிசெய்தது.
இங்கிலாந்து அணி சார்பில் மொயீன் அலி, அடில் ரஷீத், ஜோர்டான் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.