ரோகித் சர்மாவை இப்போ கேப்டனாக்கினால் அது முட்டாள்தனமாகிவிடும்! முன்னாள் வீரர் சொன்ன காரணம்
இந்திய அணியின் முன்னாள் வீரர் ஒருவர் ரோகித்சர்மாவை இந்த நேரத்தில் கேப்டன் ஆக்குவது சற்று முட்டாள்தனமானது என்று கூறியுள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில், இந்திய அனி தோல்விக்கு பின், பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
குறிப்பாக கோஹ்லிக்கு பதில், ரோகித்தை கேப்டனாக்கலாம் என்ற குரலும் எழுந்து வருகிறது. இந்நிலையில், இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் தீப்தாஸ் குப்தா கூறுகையில், ரோகித் சர்மா ஒரு மிகச்சிறந்த வீரனாகவும் கேப்டனாகவும் பல சாதனைகளை படைத்துள்ளார்.
இவர் இந்திய அணியின் டி20 தொடர்களில் துணை கேப்டனாக செயல்பட்டு மற்றும் கோஹ்லி இல்லாத நிலையில் இந்திய அணியை வழிநடத்தி பலமுறை வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார்.
ஆனால் டி20 உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் மூன்று முதல் நான்கு மாதங்களே இருக்கும் பட்சத்தில் இந்திய அணியில் கேப்டனாக விராட் கோஹ்லியை நீக்கிவிட்டு ரோகித் சர்மாவை நியமிப்பது சரிபட்டு வராது.
ஏனென்றால் புதிய கேப்டன் வழியில் வீரர்கள் நடப்பதற்கு சிறிது கால அவகாசம் தேவைப்படும் என்று கூறியுள்ளார்.