டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: கேன் வில்லியம்சன் அதிரடி, 173 ஓட்டங்கள் அடித்தால் அவுஸ்திரேலியா வெற்றி!
டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 172 ஓட்டங்களை குவித்துள்ளது.
ஐசிசி-யின் 7-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணியும், வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் விளையாடி வருகிறது.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீர்ரகளான டேரில் மிட்செல் 11 ஓட்டங்களிலும், சற்று நிதானமாக விளையாடி வந்த மார்ட்டின் கப்டில் 28 ஓட்டங்களிலும் வெளியேறினார்கள்.
அதன்பின் கேப்டன் கேன் வில்லியம்சன், க்ளென் பிலிப்ஸ் ஜோடி சேர்ந்தது. தொடக்க வீர்ரகள் அவுட்டானதை தொடர்ந்து அதிரடியாக விளையாடிய வில்லியம்சன் அரைசதத்தை கடந்தார்.
க்ளென் பிலிப்ஸ் 18 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, சிறப்பாக விளையாடி வந்த கேன் வில்லியம்சன் 48 பந்துகளில் 85 ஓட்டங்கள் அடித்து விக்கெட்டை இழந்தார்.
இறுதியாக நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ஓட்டங்கள் எடுத்து. கோப்பையை கைப்பற்ற 173 ஓட்டங்களை வெற்றி இலக்காக அவுஸ்திரேலியா அணிக்கு நிர்ணயம் செய்துள்ளது.
அவுஸ்திரேலியா பந்துவீச்சை பொறுத்தளவில் ஜோஷ் ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளையும், ஆடம் ஜம்பா 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.
இந்நிலையில், அவுஸ்திரேலிய அணி துடுப்பாட்ட களத்தில் இறங்கியுள்ளது. தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் ஃபின்ச் களமிறங்கியுள்ளனர்.