T20 உலக கோப்பை 2024: இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா

Rohit Sharma Indian Cricket Team England Cricket Team Jos Buttler T20 World Cup 2024
By Thiru Jun 27, 2024 08:09 PM GMT
Report

 T20 உலக கோப்பை தொடரின்  2வது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

மழை குறுக்கீடு

T20 உலகக் கோப்பையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது அரையிறுதி போட்டி மழையின் காரணமாக தாமதமாக தொடங்கியுள்ளது.

பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

T20 உலக கோப்பை 2024: இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா | T20 World Cup India Beats England In Semi Finals

இதனால் முதல் பேட்டிங்கில் இந்திய அணி களமிறங்கியது, தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி களமிறங்கினர்.

இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக விராட் கோலி 9 ஓட்டங்களிலும், ரிஷப் பண்ட் 4 ஓட்டங்களிலும் வெளியேறி அதிர்ச்சி தந்தனர்.

 8 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 65 ஓட்டங்களை  இந்திய அணி குவித்து இருந்த போது மழை மீண்டும் குறுக்கிட்டதால் போட்டி சற்று நிறுத்தி வைக்கப்பட்டது.

ரோகித் சர்மா பொறுப்பான ஆட்டம்

மீண்டும் போட்டி தொடங்கிய போது களத்தில் இருந்த கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சூரிய குமார் யாதவ்  பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் ஓட்டங்களை சீராக உயர்த்தினர்.

கேப்டன் ரோகித் சர்மா 39 பந்துகளில் 57 ஓட்டங்கள் குவித்து இருந்த போது அடில் ரஷித் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.

சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 47 ஓட்டங்கள் குவித்து இருந்த போது ஜோஃப்ரா ஆர்ச்சர் பந்தில் விக்கெட்டை இழந்து வெளியேறினார்.

பிரித்தானியாவில் பெண்ணுடன் இறந்து கிடந்த பாராமெடிக்கல் பணியாளர்: என்ன நடந்தது?

பிரித்தானியாவில் பெண்ணுடன் இறந்து கிடந்த பாராமெடிக்கல் பணியாளர்: என்ன நடந்தது?

இதனை தொடர்ந்து பின்னர் வந்த பாண்டியா அதிரடியாக 13 பந்துகளில், 23 ஓட்டமும், ஜடேஜா 9 பந்தில் 17 ஓட்டமும் சேர்த்து இந்திய அணியின் ஓட்டத்தை அதிகரித்தனர்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 171 ஓட்டங்கள் குவித்துள்ளது.

172 ஓட்டங்கள் இங்கிலாந்து அணி குவித்தால் 2024 T20 உலக கோப்பையின் இறுதிப் போட்டி இங்கிலாந்து அணி தகுதி பெறும்.

 அசத்திய இந்திய பந்துவீச்சாளர்

இதனை தொடர்ந்து 172 ஓட்டங்கள் என்ற இலக்குடன் இரண்டாவது பேட்டிங்கில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர் மற்றும் சால்ட் முதன்மை ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

கேப்டன் ஜோஸ் பட்லர் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி, 15 பந்துகளில் 4 பவுண்டரிகள் விளாசி 23 ஓட்டங்கள் குவித்தார்.

ஆனால் அக்சர் படேல் வீசிய 4 ஓவரின் முதல் பந்தில் விக்கெட் கீப்பர் பண்ட்-யிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

அவரை தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சால்ட் பும்ரா வீசிய  4 ஓவர் 4வது பந்தில் வெறும் 5 ஓட்டங்கள் சேர்த்து இருந்த போது போல்ட் ஆகி வெளியேறினார்.

உயிருள்ள மனித தோலுடன் புன்னகைக்கும் ரோபோ: ஜப்பானிய விஞ்ஞானிகள் அசத்தல்

உயிருள்ள மனித தோலுடன் புன்னகைக்கும் ரோபோ: ஜப்பானிய விஞ்ஞானிகள் அசத்தல்

பின்னர் வந்த மொயின் அலி(8) ஜானி பேர்ஸ்டோவ்(0), சாம் கரன்(2), லியாம் லிவிங்ஸ்டன்(11) என அனைவரும் சொற்ப ஓட்டங்களில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து இங்கிலாந்து ரசிகர்களை சோகத்தில் தள்ளினர்.

அதிகபட்சமாக ஹரி ப்ருக் மட்டும் (25) ஓட்டங்கள் குவித்து குல்தீப் பந்தில் அவுட்டானார்.

இறுதியில் இங்கிலாந்து அணி 16.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ஓட்டங்கள் மட்டுமே குவித்து அரையிறுதியில்  இந்திய அணியிடம் தோல்வியை தழுவியது.

அதே சமயம் இந்திய அணி இந்த வெற்றியின் மூலம் T20 உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்ள உள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

மண்டைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, London, United Kingdom

04 Jan, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, நவாலி வடக்கு, London, United Kingdom

07 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, திருகோணமலை, Richmond Hill, Canada

11 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, பாண்டியன்குளம், Scarborough, Canada, Whitby, Canada

13 Dec, 2024
மரண அறிவித்தல்

நீராவியடி, நீர்வேலி, Torcy, France

05 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany

11 Jan, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அராலி தெற்கு, Eastham, United Kingdom

14 Dec, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, சூரிச், Switzerland

16 Dec, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

தாவடி, யாழ்ப்பாணம்

08 Jan, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை

03 Jan, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், ஆனைக்கோட்டை, Lewisham, United Kingdom, Edgware, United Kingdom

11 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, நவாலி, சங்குவேலி, Toronto, Canada

10 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Markham, Canada

10 Jan, 2015
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு

06 Jan, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கத்தானை, மீசாலை கிழக்கு, Ottawa, Canada

13 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Toronto, Canada

07 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Luzern, Switzerland

11 Dec, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Scarborough, Canada

08 Jan, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், கோண்டாவில் கிழக்கு, Markham, Canada

06 Jan, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, அனலைதீவு 7ம் வட்டாரம், Neuss, Germany

09 Jan, 2022
மரண அறிவித்தல்

உடுவில், கல்வியங்காடு, கனடா, Canada

04 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Montreal, Canada

08 Jan, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுவைதீவு, கிளிநொச்சி, பிரான்ஸ், France

18 Dec, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Netherland, United States, Switzerland, United States

09 Jan, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்கன்குளம், பிரான்ஸ், France

09 Jan, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, கனடா, Canada

09 Jan, 2021
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Basel Niederdorf, Switzerland

04 Jan, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US