அதிகம் யோசிக்க விரும்பவில்லை! T20 உலக கோப்பை அரையிறுதி குறித்து ரோகித் சர்மா கருத்து
T20 உலக கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி மிகவும் அமைதியாகவும், கவனமுடனும் இருக்க வேண்டும் என்று கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி
2024 ம் ஆண்டுக்கான T20 உலக கோப்பையின் 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் நாளை மோதவுள்ளன.
இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா ,இங்கிலாந்துக்கு எதிரான பதற்றம் மிகுந்த டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் தனது அணி அமைதியாகவும், பணியில் கவனம் செலுத்தி இருக்க வேண்டும் என்றும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா வலியுறுத்தியுள்ளார்.
முந்தைய போட்டிகளில் ஏற்பட்ட பதற்றம் குறித்து கருத்து தெரிவித்த ரோஹித் சர்மா, "சமநிலை கண்டுபிடிப்பது அவசியம்" என்று கூறினார்.
"போட்டியின் முக்கியத்துவத்தை நாம் புறக்கணிக்க முடியாது, ஆனால் அதைப் பற்றி அதிகமாக யோசிக்கவும் விரும்பவில்லை.” என்று தெரிவித்தார்.
அத்துடன் தெளிவான சிந்தனை மற்றும் தனிப்பட்ட பொறுப்புணர்ச்சியின் முக்கியத்துவத்தை ரோஹித் சர்மா வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய ரோகித் சர்மா, "நாங்கள் ஒரு புத்திசாலித்தனமான கிரிக்கெட் அணியாக இருக்க விரும்புகிறோம். நான் விஷயங்களை எளிமையாக வைத்திருக்கிறேன், வீரர்களும் அவ்வாறே இருக்கிறார்கள். வீரர்கள் ஒவ்வொருவருக்கும் தங்களுடைய வேலையை என்னவென்பது தெளிவாக தெரியும் என தெரிவித்தார்.
பிரித்தானியாவில் பள்ளி சிறுமிகள் மரணம்: குற்றச்சாட்டு இன்றி தப்பித்த ஓட்டுநர்: குடும்பத்தினர் கடும் விமர்சனம்
இதற்கிடையில் 4 சுழற்பந்து வீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அதற்கு தெளிவான பதிலை ரோகித் சர்மா வழங்கவில்லை, ஆடுகளங்களின் தன்மைகளை பார்த்து நாங்கள் 4 சுழற்பந்து வீச்சாளர்களை அழைப்பது குறித்து முடிவு எடுப்போம் என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |