மண்ணை கவ்வியது இங்கிலாந்து! 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அசத்தல் வெற்றி
தென் ஆப்பிரிக்கா 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி டி20 உலகக் கோப்பையில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.
அசத்தல் பேட்டிங்
நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீச தேர்வு செய்தது.
டிகாக் (65 ஓட்டங்கள்) மற்றும் டேவிட் மில்லர் (43 ஓட்டங்கள்) ஆகியோரின் அற்புதமான பேட்டிங் திறனால், தென்னாப்பிரிக்கா 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது.
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
தென்னாப்பிரிக்கா வெற்றி
164 ஓட்டங்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி, தொடக்கத்திலேயே சால்ட் (11 ஓட்டங்கள்) மற்றும் பேர்ஸ்டோ (16 ஓட்டங்கள்) ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர், ஹாரி ப்ரூக் (53 ஓட்டங்கள்) மற்றும் லியாம் லிவிங்ஸ்டன் (33 ஓட்டங்கள்) குவித்து இங்கிலாந்து அணியை மீட்டெடுத்தனர்.
இருப்பினும் இங்கிலாந்து அணிக்கு கடைசி ஓவரில் 14 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் 6 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது, இதன்மூலம் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 156 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |